- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பொட்டேட்டோ பெப்பர் ஃப்ரை, சிக்கன் பெப்பர் ஃப்ரை, மட்டன் பெப்பர் ப்ரை, சோயா பெப்பர் ப்ரை, வாழைக்காய் பெப்பர் ப்ரை அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா பேபி கார்ன் வச்சு ஒரு சூப்பரான பெப்பர் ஃப்ரை ரெசிபி செஞ்சு பாருங்க. தயிர் சாதம் தக்காளி சாதம், சாம்பார் சாதம் ரசம் சாதம் எல்லாத்துக்கும் ஒரு சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கும். பேபி கார்னை மைதா மாவு சோள மாவு அரிசி மாவு எல்லாமே போட்டு நல்லா கலந்துட்டு பொரிச்சு எடுத்துட்டு அதுக்கப்புறம் இந்த பெப்பர் ப்ரை செஞ்சா அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்.
இந்த சூப்பரான பெப்பர் ஃப்ரை ரெசிபி கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரே மாதிரியான ரெசிப்பிஸ் செய்யாமல் இந்த மாதிரி வித்தியாசமான ரெசிபி செஞ்சா கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து அசத்தலாம். சளி இருமல் இருக்கும் போது இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபி செஞ்சு சாப்பிட்டால் சளி இருமல் பறந்து போய்விடும். அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும்.
குஸ்கா, தக்காளி சாதம், லெமன் சாதம் புளி சாதம் போன்ற கலவை சாதங்களுக்கும் ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த மாதிரி கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு பாருங்க. குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இந்த ரெசிபிக்கு நம்ம ஒரு மசாலா அரைச்சு செய்ய போறோம் அதனால வாசனையாகவும் இருக்கும். டேஸ்டாகவும் இருக்கும். எப்பவுமே பிரெஷா மசாலா அரைச்சு ஒரு ரெசிபி செய்யும்போது அந்த ரெசிபி ரொம்ப சூப்பரா இருக்கும்.இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான பேபி கார்ன் பெப்பர் ஃப்ரை ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் இப்படி ஒரு தரம் பேபி கார்ன் 65, மாலை நேர ஸ்நாக்ஸாக செய்து பாருங்க!
Ingredients
Method
பேபி கார்னை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் மைதா மாவு அரிசி மாவு சோள மாவு சேர்த்து மிளகாய் தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
மிளகு, சோம்பு, சீரகம், மல்லி விதைகள், காய்ந்த மிளகாய் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டு பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
ஒரு தக்காளி சேர்த்து நன்றாக வதங்கியதும் பொறித்து வைத்துள்ள பேபி கார்ன் சேர்த்து அரைத்து வைத்துள்ள பொடி சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து பத்து நிமிடம் வேக வைத்து இறக்கினால் சுவையான பேபி கார்ன் பெப்பர் ஃப்ரை தயார்.






