- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- evening, snacks
பொதுவாக சிக்கன், கோபி மஞ்சூரியன், பன்னீர், முட்டை, சோயா ஆகியவற்றை பயன்படுத்தி ‘65’ ரெசிபிகளை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பத்தே நிமிடத்தில் பேபி கார்ன் – 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம். பேபி கார்ன் இப்போது பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பொதுவாக பேபி கார்ன் வைத்து பஜ்ஜி, கிரேவி, கார்ன் போன்றவை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம்.
இன்று நாம் பேபி கார்ன் வைத்து சுவையான பேபி கார்ன் 65 செய்ய உள்ளோம். இதனை குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி மிகவும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை சூப்பராக இருக்கும். வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போதும் தங்களுக்கு வித்தியாசமான உணவுகளை சாப்பிட கேட்பார்கள். பாப்கார்னாக கொடுத்தால் சாப்பிடும் குழந்தைகள், சோளத்தை அப்படியே வேகவைத்து வழங்கினால் சாப்பிடுவது இல்லை. அவர்களுக்கு பேபி கார்ன் 65 செய்து கொடுத்தால் சுவைத்து சாப்பிடுவார்கள்.
இன்று வீட்டிலேயே பேபி கார்ன் 65 செய்வது குறித்து தெரிந்துகொள்ளலாம். மாலையில் மொறுமொறுவென்று சூடாக ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் வீட்டில் பேபி கார்ன் இருந்தால், அதனைக் கொண்டு 65 செய்து சாப்பிடுங்கள். நாம் வழக்கமாக செய்து உண்ணும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு இவை ஒரு அருமையான மாற்று. இதை நாம் குறைந்த பொருட்களை வைத்தே வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமுமின்றி செய்து விடலாம். இவை செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. அது மட்டுமின்றி ஸ்கூலில் இருந்து வரும் நம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் இந்த பேபி கார்னை 65 செய்து கொடுத்தால் அதை அவர்கள் கட்டாயம் மிகவும் விரும்பி உண்பார்கள்.
இதனையும் படியுங்கள் : ருசியான பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ் இப்படி ஈஸியாக வீட்டிலே செய்து பாருங்க ! அசத்தலான சுவையில் இருக்கும்!!
Ingredients
Method
முதலில் பேபி கார்னை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
பின் மைதா மாவு, அரிசி மாவு, கார்ன் ப்ளார் மாவு, உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்பு தூள், பெருங்காயத்தூள், கரம் மசாலா தூள் எல்லாம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் இஞ்சி பூண்டு விழுது, முட்டை , எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் உப்பு சரி பார்த்து பேபி கார்னை சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சூடான எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக பேபி கார்னை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அவ்வளவுதான் மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான, மொறு மொறுப்பான பேபி கார்ன் 65 தயார்.






