- Advertisement -
அசைவ உணவில் விதவிதமான உணவுகளை செய்து கொடுத்தால் தட்டாமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அசைவ உணவுகள் பிடித்துள்ளன. அப்படி இந்த நண்டு குருமாவை காரசாரமாக ஒரு முறை செய்து வைத்து பாருங்கள். சட்டி நிறைய சாதம் செய்தாலும் சட்டென தீர்ந்துவிடும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
-விளம்பரம்-
நண்டு குருமா | Crab Curry Recipe in Tamil
அசைவ உணவில் விதவிதமான உணவுகளை செய்து கொடுத்தால் தட்டாமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அசைவ உணவுகள் பிடித்துள்ளன. அப்படி இந்த நண்டுகுருமாவை காரசாரமாக ஒரு முறை செய்து வைத்து பாருங்கள். சட்டி நிறைய சாதம் செய்தாலும் சட்டென தீர்ந்துவிடும். . வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Yield: 4
Calories: 295kcal
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கிலோ நண்டு
- தேங்காய் பால் மூன்று டம்ளர்
- 2 பச்சை மிளகாய்
- 1 வெங்காயம்
- 1/2 தேக்கரண்டி இஞ்சி,பூண்டு அரவை
- 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 50 மிலி எண்ணெய்
- 1 தக்காளி
அரைக்க
- 6 தேக்கரண்டி தேங்காய் துருவல்
- 2 தேக்கரண்டி மல்லி தூள்
- 4 பூண்டு
- 1 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 தேக்கரண்டி சீரக தூள்
- 1/2 தேக்கரண்டி மிளகு தூள்
- 1 தேக்கரண்டி சோம்பு தூள்
செய்முறை
- முதலில் நண்டை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைத்து வைக்கவேண்டும். பின் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்
- பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் ஊற்றி அதில் அரைத்த மசாலவை கரைத்து தேவையான உப்பு போட்டு கலந்து கொள்ளவேண்டும் .அதில் பச்சை மிளகாய் கீறியும், மல்லி தழையை பொடியாக நறுக்கியும் போடவும்.
- பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும்.
- பின் கழுவி வைத்திருக்கும் நண்டை மெதுவாக போட்டு கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பிக்கும் போது மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து இருபது நிமிடம் கொதிக்கவிடவும்.
Nutrition
Serving: 250g | Calories: 295kcal | Carbohydrates: 7.8g | Protein: 21g | Fat: 0.2g | Cholesterol: 99mg | Sodium: 1124mg | Potassium: 552mg | Fiber: 1.2g
- Advertisement -