- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
கடல் உணவுகள்ள நண்டுகளுக்கு அப்படின்னு ஒரு தனி இடமே இருக்கு. நண்டு மேல விருப்பம் உள்ளவர்கள் நிறைய பேர் இருக்காங்க. இந்த நண்டுல கிரேவி செய்தாலும் இருக்காங்க. குழம்பு செய்தாலும் சரி வறுவல் செய்தாலும் சரி ரசம் செய்தா கூட சாப்பிடுவதற்கு அத்தனை பேர் இருக்காங்க. அதிக அளவு கால்சியம் அமிலங்களும் நிறைஞ்சது தான் இந்த நண்டு. நண்டுல ஆம்லெட் பண்ணி சாப்பிட்டால் அவ்வளவு சுவையா இருக்கும்.
அதுவும் மிளகு கொஞ்சம் தூக்கலா போட்டா சளிக்கும் காய்ச்சலுக்கும் ரொம்பவே நல்லது இந்த நண்டு. நண்டுல இருக்கிற. வெறும் சதைகளை மட்டும் எடுத்து அதை முட்டையோட சேர்த்து ஆம்லெட் போட்டு சாப்பிட்டா அவ்வளவு சுவையா இருக்கும். அப்படி இந்த நண்டுல நம்ம இன்றைக்கு பண்ண போறோம். அந்த ஆம்லெட் அவ்வளவு சுவையாக இருக்கும் அப்படின்னு பாத்துக்கலாம். இந்த நண்டு ஆம்லெட் எல்லா சாதத்துக்கு கூடயும் சைடு டிஷ்ஷா சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையா இருக்கும்.
சொல்லப்போனால் ரசத்துக்கும் தயிர் சாதத்துக்கும் அப்படி ஒரு காம்பினேஷனா இருக்கும் .இந்த நண்டு ஆம்லெட் ரொம்ப ஈஸியா வீட்ல இருக்குற பொருளை வைத்து எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி செய்திடலாம் இந்த நண்டு ஆம்லெட்டை. இந்த நண்டு ஆம்லெட் நண்டு யாருமே புடிகாம இருக்க மாட்டாங்க. நீங்க வாங்குற நண்டு உங்களுக்கு கிடைக்காம வீட்ல இருக்கிறவங்க சாப்பிடற அளவுக்கு அப்படி ஒரு டேஸ்டா இருக்கும். வாங்க இந்த நண்டு ஆம்லெட் எப்படி செய்யலாம்னு பாக்கலாம்.
Ingredients
Method
முதலில் நண்டை சுத்தம் செய்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவேண்டும்.
பிறகு வெங்காயம் , தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் ஒரு கடாயில் நண்டு வேகம் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவுமிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு அதனுடன் நண்டையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். நண்டு நன்றாக வெந்த பிறகு அதன் ஓடை உரித்து விட்டு உள்ளே உள்ள சதையை மட்டும்தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். அடித்து வைத்துள்ளமுட்டையில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்துகலந்து விட்டு அதில் சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி தலை சேர்த்து நன்றாககலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் தோசை கல்லை வைத்து எண்ணெய் ஊற்றிசூடானதும் அடித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து ஆம்லெட் ஆக போட வேண்டும்.
பிறகு அதில் நண்டில் இருந்து எடுத்து வைத்துள்ள சதைகளைசேர்த்து மீண்டும் அதன் மேல் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து ஒரு புறம் வெத பிறகு மறுபுறம்திருப்பிப் போட்டு எடுத்தால் சுவையான நண்டு ஆம்லெட் தயார்






