- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 2
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
நண்டு வச்சு அதுல நண்டு கிரேவி நண்டு பெப்பர் மசாலா நண்டு குழம்பு அப்படின்னு நிறைய செஞ்சு இருப்பீங்க. ஆனா நண்டு வச்சு ஆம்லெட் செஞ்சு பார்த்து இருக்கீங்களா ஒரு தடவ அதையும் செஞ்சு பார்த்துடுங்க. பொதுவா ஒரு சிலர் முட்டையில்லாமல் சாப்பிடவே மாட்டாங்க. முட்டை இல்லாம சாப்பாடு இறங்காதுன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி முட்டை பிரியர்களுக்கு அப்பப்போ வித்தியாசமா இந்த மாதிரி நண்டு வச்சு ஆம்லெட் செஞ்சு குடுங்க.
வீட்ல இருக்கிற எல்லாருமே கூட இந்த நண்டு ஆம்லெட்டை ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவாங்க. வெங்காயம் தக்காளி மிளகுத்தூள் கொத்தமல்லி இலைகள் இதெல்லாம் சேர்த்து செய்றதால டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். நல்லா சுட சுட மீன் குழம்பு வச்சு அதுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான நண்டு ஆம்லெட் வச்சு சாப்பிடலாம். இந்த நண்டு ஆம்லெட்டுக்கு இன்னும் ரெண்டு தட்டு சாப்பாடு சாப்பிடலாம். அந்த அளவுக்கு ருசியா சாப்பிட்டு சாப்பிட வாய்க்குள்ள போய்க்கிட்டே இருக்கும்.
நீங்க வீட்டுக்கு நண்டு கிரேவி செய்வதற்கு நண்டு வாங்கினா கூட அத வச்சு சூப்பரான நண்டு ஆம்லெட் செஞ்சு பாருங்க இதுக்குன்னு தனியா போய் நண்டு வாங்கணும் அப்படின்ற அவசியமில்லை. உங்களுக்கும் வேலை சீக்கிரமா முடிஞ்ச மாதிரி சுவை ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். இந்த ஆம்லெட் ரெசிபி எப்படி இருக்கும்னு யோசிக்காதீங்க ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்க வீட்ல இருக்கக்கூடிய எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த டேஸ்டான வித்தியாசமான நண்டு ஆம்லெட் எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இந்த வாரம் ஸ்பெஷாலக நண்டு வாங்கி செட்டிநாடு நண்டு மசாலா இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
நண்டை கழுவி சுத்தம் செய்து அதில் உள்ள சதைப்பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் நண்டின் சதைப்பகுதி மிளகுத்தூள் உப்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி கொத்தமல்லி இலைகள் அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
தோசை சட்டியில் எண்ணெய் சேர்த்து கலந்து வைத்துள்ளதை ஊற்றி ஆம்லெட் போட்டு எடுத்தால் சுவையான நண்டு ஆம்லெட் தயார்.






