நண்டு வாங்கி அதுல ஆந்திரா ஸ்டைல் நண்டு ,காரசாரமான நண்டு தொக்கு, நண்டு மிளகு தொக்கு, நண்டு தொக்கு அப்டின்னு நண்டு வச்சு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க. ஆனா இன்னைக்கு நம்ம நண்டு வச்சு செய்யக்கூடிய ஒரு சிம்பிளான சூப் தான் பாக்க போறோம். இந்த நண்டு சூப் குடிச்சா இருமல் சளி காய்ச்சல் எல்லாமே பறந்து போயிடும். தொண்டை கரகரப்பு தொண்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கு இந்த நண்டு சூப் வச்சு குடிச்சு பாருங்க. இதை குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே கொடுக்கலாம்.
இந்த மழைக்காலத்துல சளி இருமல் அடிக்கடி வந்துடும். அப்படி வந்துட்டா நண்டு வாங்கியதுல இந்த மாதிரி ஒரு சூப்பரான நண்டு சூப் செஞ்சு கொடுங்க. இதைத் தொடர்ந்து ரெண்டு மூணு நாளைக்கு குடிச்சாலே சளி இருமல் காணாமல் போய்விடும்.இதோட டேஸ்ட்டும் அட்டகாசமா இருக்கும்.சளி இருமல் இருந்தால் தான் இந்த ரெசிபி செய்து குடிக்கனும் அப்டின்னு அவசியம் இல்லை. உங்களுக்கு எப்போ தோனுனாலும் இந்த நண்டு சூப் செய்து குடிக்கலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம் அவர்களுக்கு உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
நண்டு சூப்பில நல்ல மிளகுத்தூள் அதிகமா போட்டு காரசாரமா குடிக்கும்போது கண்டிப்பா உங்களுக்கு தொண்டைக்கு இதமா இருக்கும். நண்டு சூப் பிடிக்காதவங்க கூட இந்த மாதிரி சூப்பரா செஞ்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பா அத விரும்பி குடிப்பாங்க. இதுல சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி எல்லாத்தையும் அரைச்சு செய்கிறதால இதோட வாசனையும் ரொம்ப தூக்கலா இருக்கும். உங்ககிட்ட அம்மி இருந்துச்சுன்னா அம்மில கூட அரைச்சு வைக்கலாம். இதுல ஒரு நண்டு கால நல்லா அரைச்சு சேர்க்கறதால நண்டோட எல்லாம் சாறும் இந்த சூப்ல இறங்கி குடிக்கிறதுக்கு அவ்வளவு ருசியாவும் ஒரு சூப்பரான அருமையான மருந்தாகவும் இருக்கும்.
உங்க வீட்ல யாராவது இப்போ இனிமேல் பிரச்சனையால கஷ்டப்பட்டு இருந்தா உடனே நண்டு வாங்கி இந்த நண்டு சூப் செஞ்சுடுங்க. அந்த சூட்ல இருக்கக்கூடிய நண்டு சாப்பிட்டுக்கிட்டே நண்டு சூப் குடிக்கும் போது சுவை அட்டகாசமா இருக்கும். ஒரே ஒரு தடவை மட்டும் இதை செஞ்சு குடிச்சு பாருங்க அதுக்கு அப்புறமா அடிக்கடி செய்வீங்க. கடையில போய் நண்டு சூப் வாங்கி குடிக்கணும் அப்படின்ற அவசியமே கிடையாது குக்கர்ல எல்லாத்தையும் சேர்த்து ஒரு மூணு விசில் விட்டு இறக்குனாலே சூப்பரான நண்டு சூப் தயாராகிடும். கண்டிப்பா உங்க வீட்ல இதை முயற்சி செஞ்சு பாருங்க இப்ப வாங்க இது சூப்பரான சிம்பிளான நண்டு சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
நண்டு சூப் | Crab Soup Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 2 நண்டு
- 10 சின்ன வெங்காயம்
- 6 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் மிளகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 தக்காளி
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 பச்சை மிளகாய்
- 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
- கொத்தமல்லி சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகு இஞ்சி பூண்டு வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். நண்டு காலை சேர்த்து அதனை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அரைத்து வைத்துள்ள மிளகு சீரக விழுதை சேர்த்து நன்றாக கிளறவும்.
- மஞ்சள் தூள் உப்பு மல்லி தூள் பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்த்து வதக்கவும். தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
- பிறகு கழுவி வைத்துள்ள நண்டு சேர்த்து நன்றாக கிளறிய பிறகு அரைத்து வைத்துள்ள நண்டையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று விசில் விட்டு இறக்கவும்.
- அது கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறினால் சுவையான நண்டு சூப் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வறுத்து அரைத்த நண்டு மசாலா இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!