- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
நண்டு அப்படின்னு சொன்னாலே ஒரு சில பேருக்கு வாயில எச்சில் வரும். அந்த அளவுக்கு நண்டு ரொம்ப பிடிச்சவங்க இருப்பாங்க. வறுத்து அரைச்ச மசாலாவை வைத்து ஒரு சூப்பரான நண்டு மசாலா செஞ்சா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. நண்டு சாப்பிடுவது உடம்பில் இருக்க பல வகையான பிரச்சனைகளுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. சளி இருமல் ஜலதோஷம் போன்ற பிரச்சினைகளுக்கு நண்டு சாப்பிட்டா உடனே சரியாகிவிடும்.
அதனால இனிமேல் சளி இருமல் வந்துட்டா உடனே மருத்துவமனைக்கு போகாமல் காரசாரமா இந்த வறுத்து அரைச்ச நண்டு மசாலாவை சாப்பிட்டு பாருங்க. சட்டுனு சரியாகிவிடும். நண்டு கிரேவியில் பல விதம் இருக்கு. அதுல இந்த முறையில் ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி இதே மாதிரி தான் நண்டு மசாலா செய்வீங்க. ரசம் வச்சு இந்த நண்டு மசாலாவை சேர்த்து சாப்பிடுங்க. இது ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷனா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான வறுத்து அரைத்த நண்டு மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : எச்சில் ஊறும் நண்டு கட்லெட் மாலை வேளைக்கு இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!
Ingredients
Method
ஒரு கடாயில் இஞ்சி பூண்டு சீரகம் மிளகு மல்லி விதைகள் காய்ந்த மிளகாய் அனைத்தையும் சேர்த்து 3 நிமிடங்களுக்கு வறுத்து தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு சீரகம் கருவேப்பிலை பச்சை மிளகாய் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்.
அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து அதனுடன் தக்காளியையும் சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும்.
பிறகு நண்டு சேர்த்து நன்றாக கலந்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து 20 நிமிடங்களுக்கு வேகவைத்து தண்ணீர் வற்றியதும் நன்றாக கிளறி இறக்கினால் சுவையான நண்டு மசாலா தயார்.






