- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் நண்டு அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. பொதுவாகவே கடல் உணவுகளை அசைவ பிரியர்கள் அதிகமாகவே விரும்பி உண்கின்றனர். இதன் சுவைக்கு ஒட்டுமொத்த நபர்களும் அடிமையாகி விடுவார்கள். மீன் வகைகளைக் காட்டிலும், நண்டு, இறால் வகைகளின் சுவைகளுக்கு அடிமையாகாத அசைவப் பிரியர்கள் இருக்கவே மாட்டார்கள். கடல் உணவுகளில் ஒன்றான நண்டு சளி, இருமலுக்கு சிறந்த தீர்வு அளிக்கின்றது. சளி, இருமல் என்ற தொந்தரவு ஏற்பட்டாலே நண்டு வாங்கி சமைத்து சாப்பிடுபவர்கள் அதிகம்.
நண்டு ரெசிபி பல இருந்தாலும் நண்டினை பெரும்பாலும் கிரேவி, ரசம், சூப் செய்து சாப்பிடுவார்கள். ஆகவே, இப்பதிவில் நண்டு தொக்கு எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒரே ஒரு முறை நீங்கள் இதுபோன்று நண்டு தொக்கு செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும். பின் உங்களை அடிக்கடி இந்த நண்டு தொக்கு செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள். மிளகு சேர்த்து காரசாரமான இந்த நண்டு தொக்கு செய்து சாப்பிட்டால் நெஞ்சுச்சளி, கபம் நீங்கி விடும். இப்போது தோசை, இட்லி, நாண், சப்பாத்தி, சாம்பார் சாதம், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையான நண்டு தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இந்த வாரம் ஸ்பெஷாலக நண்டு வாங்கி செட்டிநாடு நண்டு மசாலா இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
முதலில் நண்டை நன்கு சுத்தம் செய்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நண்டை சேர்த்து கலந்து அதனுடன் தக்காளி விழுது, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான நண்டு தொக்கு தயார்.






