- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast
தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ஒரு பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான காலை உணவு இட்லி. இட்லி தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பிரபலமான காலை உணவுத் தேர்வாகும். அது மட்டுமல்லாமல் சிறுவர்கள் முதல் வயது முதிந்தோர் வரை விரும்பி உண்ணும் உணவாகவும் இட்லி உள்ளது. அந்த வகையில் இன்று காலையும் உங்கள் வீட்டில் இட்லி செய்ய போகிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியா இல்லாமல் காலை வேளையில் அலுவலகத்திற்கு செல்லும் நேரத்தில், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், சற்று வித்தியாசமானதாகவும் சமைக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா?
அப்படியானால் வீட்டில் வெள்ளரிக்காய் இருந்தால் எளிதில் சூப்பரா வித்தியாசமான சுவையில் ஒரு இட்லி செய்யலாம். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் வெள்ளரிக்காயை சாப்பிட மறுக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு இந்த வெள்ளரிக்காய் இட்லியை செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த இட்லி பஞ்சு போல் மிருதுவாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.
இது காலை உணவுக்கு ஏற்றது. காலை உணவிற்கு எப்பவும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல் என்று சாப்பிடாமல் இந்த மாதிரி ருசியான வெள்ளரிக்காய் இட்லி செஞ்சு சாப்பிட்டு பாருங்கள். இந்த சுவையான வெள்ளரிக்காய் இட்லியை காரசாரமான தக்காளி சட்னியுடன் சேர்த்து பரிமாறினால், உங்கள் குடும்பத்தினர் இனி இந்த இட்லி மட்டும் போதும் என்பார்கள். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான வெள்ளரிக்காய் இட்லி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : நாக்கை நாட்டியமாட வைக்கும் வெள்ளரிக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி ?
Ingredients
Method
முதலில் வெள்ளரிக்காயை தோல் சீவி விட்டு துருவி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பவுளில் துருவிய வெள்ளரிக்காய், ரவை, தேங்காய் துருவல், கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு, பேக்கிங் சோடா, தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து கலந்து வைத்துள்ள ரவை கலவையில் சேர்த்து கலந்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து இந்த கலவையை இட்லியாக ஊற்றி எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான வெள்ளரிக்காய் இட்லி தயார்.






