Home சைவம் நாக்கை நாட்டியமாட வைக்கும் வெள்ளரிக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி ?

நாக்கை நாட்டியமாட வைக்கும் வெள்ளரிக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி ?

நாம் தினசரி மசாலா நிறைந்த உணவு பொருட்களையும் குழம்புகளையும் சாப்பிடுவதால் சில உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் மாதத்தில் சில நாட்கள் மசாலா இல்லாத ரசம், மோர் குழம்புகள் போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிடலாம். அதிலும் மோர் குழம்பு நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது நாம் உடலுக்கு அதனால் பல நன்மைகளும் ஆரோக்கிய பயன்களும் கிடைக்கிறது.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : அரிசி அலசிய தண்ணீரில் புதியதாக ஒரு ரசம் செய்வது எப்படி ?

இன்று நாம் மோர் குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் மோர் குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். இது மாதிரியாக நீங்கள் மோர் குழம்பு வைத்து மாதம் இருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் சிறயவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது பிடித்ததாக இருக்கும் மேலும் தினசரி மசால் நிறைந்த குழம்புகளை சாப்பிடும் அவர்களுக்கு ஒரு மாறுதலான உணவாக இருக்கும்.

Print
No ratings yet

வெள்ளரிக்காய் மோர் குழம்பு | Cucumber Buttermilk Kulambu Recipe in Tamil

இன்று நாம் மோர் குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் மோர் குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். இது மாதிரியாக நீங்கள் மோர் குழம்பு வைத்து மாதம் இருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் சிறயவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது பிடித்ததாக இருக்கும் மேலும் தினசரி மசால் நிறைந்த குழம்புகளை சாப்பிடும் அவர்களுக்கு ஒரு மாறுதலான உணவாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time20 minutes
Total Time30 minutes
Course: Kulambu
Cuisine: Indian, TAMIL
Keyword: cucumber buttermilk kulambu, வெள்ளரிக்காய் மோர் குழம்பு
Yield: 4 People
Calories: 153kcal

Equipment

  • 2 கடாய்
  • 2 பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 கப் தயிர்
  • ½ கப் வெள்ளரிக்காய்
  • ½ கப் துருவிய தேங்காய்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 tbsp கடலை பருப்பு தண்ணீரில் ஊற வைத்தது
  • ½ tbsp சீரகம்
  • 2 சின்ன வெங்காயம்
  • இஞ்சி சிறிய துண்டு
  • ¼ tbsp மஞ்சள் தூள்

தாளிக்க

  • 2 tbsp எண்ணெய்
  • ½ tbsp உளுந்தம் பருப்பு
  • ½ tbsp கடுகு
  • 2 வர மிளகாய்
  • கருவேப்பிலை சிறிது

செய்முறை

  • முதலில் வெள்ளரிக்காய் பழத்தை நன்கு கழுவிக்கொண்டு துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். பிறகு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வெள்ளரிக்காயை சேடர்த்து நன்றாக கொதிக்க வையுங்கள்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் நாம் வைத்திற்கும் துருவிய தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், ஊற வைத்த கடலை பருப்பு, சிறிய இஞ்சி துண்டு என அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மை போல நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு வெள்ளரிக்காய் நன்கு வெந்திருக்கும் இந்நிலையில் தேவையான உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி விடவும் அடுத்து அரைத்து வைத்திருக்கும் தேங்காய் பேஸ்ட்டை இதனுடன் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
  • ஒரு இரண்டு நிமிடம் நன்றாக கொதிக்க விட்டு கடாயை இறக்கி ஆற வைத்து விடுங்கள். பின்பு வேற கடாயை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள்.
  • எண்ணெய் காய்ந்ததும் கடுகு, காயத்தூள், உளுந்தம் பருப்பு, வர மிளகாய், சிறிது கருவேப்பிலை சேர்த்து தாளித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின் நாம் வைத்துள்ள தயிரை எடுத்து கட்டி இல்லாமல் நன்றாக கடைந்து கொள்ளுங்கள். பின் கடைந்த தயிரை குழம்புடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு பின் தாளித்த தாளிப்பையும் சேர்த்து விடுங்கள் அவ்வளவுதான் சுவையான மோர் குழம்பு தயாராகிவிட்டது.

Nutrition

Calories: 153kcal | Carbohydrates: 21g | Protein: 15g | Fat: 10g

English Overview: buttermilk kulambu is one of the most important dishes in south india. buttermilk recipe or buttermilk kulambu seivathu eppadi or buttermilk kulambu recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

NO COMMENTS

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here