Advertisement
சைவம்

இதுவரை நீங்கள் செய்யாத குருமா ரெசிபி? சப்பாத்திக்கு தொட்டுக்க ருசியான தயிர் குருமா இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

சப்பாத்தி பூரிக்கு குருமா அப்படினா அதிகமா செய்ற குருமா  உருளைக்கிழங்கு பூரி மசாலா, இல்லைனா உருளைக்கிழங்கு குருமா இல்லன்னா காய்கறிகள் போட்டு குருமா அப்படி இல்லன்னா மட்டன் குழம்பு சிக்கன் குழம்பு சப்பாத்திக்கு சேர்ந்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு சைடிஷ் இல்லாமல் தயிர் உருளைக்கிழங்கு வச்சு எப்படி ஒரு சுவையான குருமா ரொம்பவே சுலபமா செய்து முடிக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம்.

இந்த தயிர் குருமா ரொம்ப டேஸ்ட்டா குறைவான பொருட்களை வைத்து ரொம்ப ரொம்ப ருசியா எப்படி எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி தயிர் குருமா செய்ய போறோம். ஒரு மாதிரி குருமா செய்யாமல் அதிகமா மசாலாக்கள் அரைக்காமல் ரொம்ப ஈஸியா நம்ம ரொம்ப சீக்கிரத்துல இந்த குருமாவை செய்து முடித்து முடித்து விடலாம். நீங்க எல்லாரும் இதுவரைக்கும் செய்து கொண்டிருக்கிற குருமாக்கல் விட இப்படி குருமா செய்து உங்க குடும்பத்துல இருக்கிற எல்லாரையும் அசத்துங்க.

Advertisement

எப்பவுமே ஒரே மாதிரியான குருமாக்கள் கொடுத்து கொடுத்து அவங்களுக்கும் போர் அடிச்சு போயிருக்கிறவர்களுக்கும் நீங்க புதுசா இந்த தயிர்ல வச்சு குருமா செஞ்சு கொடுக்கும் பொழுது ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. எப்போது சாப்பிடுவதை விட அதிகமாகவே சாப்பிடுவாங்க .வாங்க இந்த தயிர் குருமா எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

தயிர் குருமா | Curd Kuruma Recipe In Tamil

Print Recipe
தயிர் குருமா ரொம்ப டேஸ்ட்டா குறைவான பொருட்களை வைத்து ரொம்ப ரொம்ப ருசியா எப்படி எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி தயிர் குருமா செய்ய போறோம். ஒரு மாதிரி குருமா செய்யாமல் அதிகமா மசாலாக்கள் அரைக்காமல் ரொம்ப ஈஸியா நம்ம ரொம்ப சீக்கிரத்துல இந்த குருமாவை செய்து முடித்து முடித்து விடலாம். நீங்க எல்லாரும் இதுவரைக்கும் செய்து கொண்டிருக்கிற குருமாக்கல் விட இப்படி குருமா செய்து உங்க குடும்பத்துல இருக்கிற எல்லாரையும் அசத்துங்க. .வாங்க இந்த தயிர் குருமா எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
Advertisement
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Curd Kuruma
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 70

Equipment

  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 2 கப் தயிர்
  • 3 உருளைக்கிழங்கு
  • 1 வெங்காயம்
  • 2 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் மல்லிதூள்
  • 1/2 ஸ்பூன் கரமசாலாதூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை

தாளிக்க

  • எண்ணெய் தேவையானஅளவு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 பிரியாணி பிரியாணிஇலை
  • 1 சிட்டிகை பெருங்காயம்

Instructions

  • முதலில் உருளைக்கிழங்குகளை தோல் சீவி கழுவி விட்டு சின்ன சின்ன
    Advertisement
    சதுர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.அடுப்பில் ஒரு கடாயை வைத்து தண்ணீர் ஊற்றி நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கு வெந்த பிறகு நீரில்லாமல் உருளைக்கிழங்கை வடித்து  எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் மிளகாய் தூள் ,மஞ்சள் தூள் சேர்த்து  வதக்கவும்.
  • பின்  உருளைக்கிழங்கை சேர்த்து மசாலா மீது முழுவதுமாக படுமாறு கலந்து விட்டு எடுத்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்து வைத்துக்கொண்டு அதில் மிளகாய் தூள் ,மல்லித்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்தெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  •  அடுப்பில் ஒரு கடாயை வைத்து என்னை ஊற்றி காய்ந்த பிறகு அதில் சீரகம், பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளவும். பிறகு பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.இஞ்சி பூண்டு பச்சை வாசனை சென்ற பிறகு அதில் கலக்கி வைத்துள்ள தயிரை ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.
  • கொதித்து வந்த பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து வறுத்து எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை குருமாவில் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • உருளைக்கிழங்கு சேர்த்து குருமா நன்றாக கொதித்த பிறகு அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கி சப்பாத்திக்கு சூடாக பரிமாறினால் சுவையான தயிர் குருமா தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 70kcal | Carbohydrates: 0.2g | Protein: 6g | Fat: 2g | Sodium: 70mg | Potassium: 69mg | Calcium: 28mg | Iron: 4mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

3 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

3 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

12 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

13 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

14 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

15 மணி நேரங்கள் ago