- Prep
- 5 min
- Cook
- 5 min
- Total
- 10 min
- Serves
- 3
- Cuisine
- Indian
- Course
- Breakfast
உலகம் முழுவதும் சாண்ட்விச் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. குறிப்பாக இளம் தலைமுறையினர்கள் மத்தியில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான் என்றால் அது மிகை அல்ல. சாண்ட்விச்களில் பல வகை உண்டு. அதில் சிக்கன் சாண்ட்விச், வெஜிடபிள் சாண்ட்விச், மஸ்ரூம் சாண்ட்விச், மற்றும் பன்னீர் சாண்ட்விச் மிகவும் பிரபலமானவை. ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது தயிர் சாண்ட்விச். நிறைய பேர் காலை நேரத்தில் சாப்பிட நேரம் இல்லை என்பதற்காக எதையும் சாப்பிடாமல், ஆபிஸிற்கு செல்கின்றனர். ஆனால் அவ்வாறு செல்வதால் உடல் நிலை தான் பாதிக்கப்படும். ஆகவே அப்போது ஈஸியாக செய்து சாப்பிடும் வகையில், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் தயிர் வைத்து, ஒரு சாண்விட்ச் செய்து சாப்பிடலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவு.
இதை மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் ஸ்கூலில் இருந்து வரும் குழந்தைகள் இதை மிகவும் விரும்பி சுவைப்பார்கள். அது மட்டுமின்றி இவை ஒரு அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பியும் கூட. நம் குழந்தைகளுக்கு மதிய உணவாக ஸ்கூலுக்கு கொடுத்தனுப்ப மற்றும் நாம் அலுவலகங்களுக்கு எடுத்து செல்ல இவை மிகவும் உகந்தது. சாண்ட்விச் என்றாலே பெரும்பாலும் அதை நாம் கடைகளுக்கு சென்று தான் சாப்பிடுவோம். ஆனால் உங்களுடைய வீட்டில் பிரட் பாக்கெட் இருந்தால் போதும் 5 நிமிடத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த தயிர் சாண்ட்விச் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் :வாய்க்கு ருசியான பீட்சா சாண்ட்விச் இப்படி ஒரு முறை வீட்டில் ட்ரை பன்னி பாருங்க!
Ingredients
Method
முதலில் வெங்காயம், கேரட் இரண்டையும் நன்கு அலசி விட்டு நீளமாகவோ அல்லது பொடியாகவோ நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பவுளில் தயிர், பச்சை மிளகாய் விழுது, மிளகு தூள், உப்பு, கொத்தமல்லி தழை, சாட் மசாலா, நறுக்கிய வெங்காயம், கேரட் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் இந்த கலவையை எடுத்து ஒரு பிரெட்டில் சேர்த்து பரப்பி மற்றொரு பிரெட்டால் மூடி விடவும்.
பின் ஒரு தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து அதன்மேல் சாண்ட்விச்சை வைத்து சிறிதளவு எள் தூவி, இரண்டு பக்கமும் டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் சுவையான தயிர் சாண்ட்விச் தயார். இதனை இரண்டாக வெட்டி பரிமாறவும் மிகவும் ருசியாக இருக்கும்.






