நம்ம என்ன சாப்பாடு செஞ்சாலும் அதுல தாளிக்கிறதுக்கு கொஞ்சமா கறிவேப்பிலை சேர்த்தா தான் மணமாய் இருக்கும். ஆனா அந்த கறிவேப்பிலையை நம்ம சாப்பிடவே மாட்டோம் ஒதுக்கி தான் வைப்போம் ஆனா அதுல நிறைய நிறைய ஆரோக்கியமான விஷயங்கள் இருக்கு. அந்த வகையில கறிவேப்பிலை வச்சு ஒரு சூப்பர் டேஸ்டான சட்னி தான் இப்ப நம்ம பாக்க போறோம்.கறிவேப்பிலைய சாப்பிடாம ஒதுக்குறவங்களுக்கு இந்த சட்னியை ஒரு தடவை செஞ்சு கொடுங்க ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க இட்லி, தோசை சப்பாத்தி சாதம் அப்படின்னா எல்லாத்துக்குமே சூப்பரான காமினேஷன் இருக்கும்.
சுடு சாதத்தில் இந்த கறிவேப்பிலை சட்னியை வைத்து கொஞ்சம் நல்லெண்ணெய் இல்லனா நெய் ஊத்தி சாப்பிட்டால் இதுக்கு சைடு டிஷ்ஷே தேவை இல்லை அந்த அளவுக்கு டேஸ்ட் சூப்பரா இருக்கும். உங்க குழந்தைகளோட டிபன் பாக்ஸ்க்கு இதை வைத்து கொடுத்தால் கண்டிப்பாக காலி பண்ணிட்டு தான் வருவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான ரெசிபி தான் இது. நீங்களும் எப்பவுமே ஒரே மாதிரியா தக்காளி சட்னி தேங்காய் சட்னி மிளகாய் சட்னி செய்யாம இந்த மாதிரி ஒரு தடவை கறிவேப்பிலை சட்னியை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான கறிவேப்பிலை சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
கறிவேப்பிலை சட்னி | Curry Leaves Chutney Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 3 தக்காளி
- 2 கப் கறிவேப்பிலை
- 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- 1 துண்டு புளி
- 6 பல் பூண்டு
- 4 வர மிளகாய்
- 1 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பு, புளி கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய், பூண்டு அனைத்தையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை நறுக்கிய தக்காளி தேங்காய் துருவல் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும்.
- முதலில் காய்ந்த மிளகாய் பூண்டு புளி உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு அனைத்தையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளவும்.
- பிறகு மீதமுள்ளதையும் சேர்த்து உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ளதை சேர்த்தால் சுவையான கறிவேப்பிலை சட்னி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சத்தும் மணமும் நிறைந்த கறிவேப்பிலை தோசை இப்படி செய்து கொடுத்து உங்கள் காலை பொழுதை இனிமையாக மாற்றிடுங்கள்!!!