மேஷம்

இந்த வாரத்தின் ஆரம்பத்திலேயே இதுநாள் வரை உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து வகையான பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். உங்கள் குடும்ப சூழலை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். உறவினர்கள் மற்றும் நண் பர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளுக்கு மேற்கொள்ளும் திருமண முயற்சிகள் நல்லபடியாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
ரிஷபம்

இந்த வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். உங்களின் பணியிடத்தில் நல்ல பலன்களைக் காண்பீர்கள். வீட்டில் உள்ள உறவினர்கள் மட்டுமின்றி வெளியில் இருந்தும் சிறப்பான ஆதரவைப் பெறுவீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். ஆனால், திடீர் செலவுகளால் மன உளைச்சல் ஏற்பட்டு அன்றாடப் பணிகளில் கவனத்துடன் ஈடுபடமுடியாது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். சக பணியாளர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.
மிதுனம்

இந்த வாரத்தின் தொடக்கத்தில் நீங்கள் காத்திருந்த மகிழ்ச்சி கிடைக்க எல்லா வாய்ப்பும் உள்ளது. தொழில் வாழ்க்கையில் பதவி உயர்வுக்கான விருப்பம் நிறைவேறும், சில பெரிய பொறுப்புகளைப் பெறுவதற்கான முழு வாய்ப்புகள் உள்ளன. திருமண முயற்சிகள் பலிதமாகும். தாயாருக்கு சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் சற்று பிற்போக்கான நிலைமையே காணப்படும்.
கடகம்

இந்த வாரத்தின் ஆரம்பம் மிக சிறப்பாக இருக்கும். ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றும். ஆனால் இந்த சூழ்நிலையில் நீங்கள் உங்கள் முக்கிய இலக்கில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். குடும்பம் மற்றும் பிள்ளைகளின் திருமணம் தொடர்பான முக்கிய முடிவுகளை இந்த வாரம் எடுப்பது சாதகமாக முடியும். ஒரு சிலருக்கு வயிற்று பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
சிம்மம்

இந்த வாரத்தை நல்ல அதிர்ஷ்டத்துடன் தொடங்குவார்கள். வியாபாரத்தில் விரும்பிய முன்னேற்றம் பெறுவதற்கான முழு வாய்ப்புகள் உள்ளன. அரசியாலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரிய பதவி கிடைக்கலாம். கணவன் – மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. ஒரு சிலருக்கு புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகள் மூலம் சுபச்செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
கன்னி

இந்த வாரத்தின் ஆரம்பம் முக்கியமானதாக இருக்கும். முழு ஆற்றலையும் திரட்டி, இலக்குகளை அடைய முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும். இதைச் செய்வதன் மூலம் மட்டுமே நீங்கள் விரும்பிய வெற்றியைப் பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகம் உண்டாகும். ஒருசிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வழக்குகள் எதுவும் இருந்தால் உங்களுக்குச் சாதகமாக முடியும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.
துலாம்

இந்த வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு கொஞ்சம் பிஸியாக இருக்கும். பெரிய வெற்றியை தரும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் சில முக்கிய பொறுப்பை பெறலாம். எனினும் இதை நிறைவேற்ற கூடுதல் கடின உழைப்பையும் முயற்சியையும் செய்ய வேண்டியிருக்கும். சிறு அளவில் உடல்நலக் குறைவு ஏற்படலாம். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் சில பிரச்னை கள் தோன்றலாம். மனதில் அடிக்கடி இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்படலாம். கணவன் – மனைவிக்கி டையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
விருச்சிகம்

இந்த வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். பல முழுமையடையாத பணிகள் இந்த வாரத்தில் நிறைவடைவதை நீங்கள் காணலாம். தகராறு அல்லது நீதிமன்றம் தொடர்பான பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்வது சாதகமாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளுக்கு வரன் தேடும் முயற்சியை இந்த வாரம் மேற்கொள்ளலாம்.
தனுசு

இந்த வாரத் தொடக்கத்தில் அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நிலை ஏற்படும், ஆனால் அதைப் பெற சோம்பலை நீங்கள் கைவிட வேண்டும். காலம் யாருக்காகவும் நிற்காது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் நலம் சீராகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவர். தம்பதியர் இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பங்குதாரர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும்.
மகரம்

இந்த வாரம் உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதில் இந்த வாரம் உங்கள் உடல்நலக்குறைவு தடையாக இருக்க கூடும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். திடீர் நோய்களால் நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படலாம். எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்ய நேரிடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள்.
கும்பம்

இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஏற்கனவே உங்களுக்கு இருந்து வரும் பிரச்சனைகள் குறையும். உங்கள் நெருங்கிய நண்பர்களின் நண்பரின் உதவியால் முக்கிய வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். திருமண முயற்சிகள் பலிதமாகும். உறவினர்கள் அனுசரனையாக இருப் பார்கள். உடல் நலனில் அக்கறை அவசியம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும்.
மீனம்

இந்த வாரத்தின் ஆரம்பம் மிகவும் சிறப்பாக இருக்கும், உங்களது திறமைகளை சிறந்த முறையில் பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். வணிகர்கள் தங்கள் தொழில் தொடர்பாக சில நல்ல தகவல்களை பெறுவார்கள். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத் தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.
இதனையும் படியுங்கள் : புதனின் பெயர்ச்சியால் புத்தாண்டு தொடக்கத்திலேயே இந்த 3 ராசிகளுக்கு பம்பர் பலன்கள் தான்!!


