ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நடக்கக்கூடிய ஒவ்வொரு விதமான நன்மைகளுக்கும் நவகிரகங்கள் முக்கியமான காரணமாக திகழும். நவகிரகங்கள் எந்த இடத்தில் இருந்து எந்த திசையை பார்க்கிறார்கள் என்பதை பொறுத்து நம்முடைய வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். ஒரு சுபகாரியம் நடைபெறுகிறது என்றால் அதற்கும் கூட நவகிரகங்கள் தான் காரணம். வாழ்க்கையில் ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தாலும் அதற்கும் காரணம் நவகிரகங்கள் தான். அப்படிப்பட்ட நவகிரகங்களின் அருளை பெறுவதற்கும், வாழ்க்கையில் நாம் நினைத்தது நடப்பதற்கும் நாம் செய்ய வேண்டிய எளிமையான பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

நவகிரக வழிபாடு
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல்கள் இருக்கும் அவை நிறைவேறுவதற்காக பலவிதமான தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவார்கள். தெய்வ வழிபாட்டை செய்யும்போது ஒரு சில சூட்சமமான வழிமுறைகளையும் பின்பற்றினால் அதற்கான பலன் அதிகமாகவே கிடைக்கும். அப்படிப்பட்ட ஒன்றுதான் நவகிரக வழிபாடு நாம் எந்த ஒரு வேண்டுதல் நிறைவேற வேண்டுமென்று நினைக்கிறோமோ அந்த வேண்டுதலுக்குரிய கிரகம் எதுவென்று கண்டறிந்து பிறகு அதற்கு தகுந்தவாறு வழிபாடு செய்தால் நாம் நினைத்தது அனைத்தும் நிறைவேறும். அந்த வகையில் நினைத்தது நிறைவேற இந்த தீப வழிபாட்டை செய்து பார்க்கலாம்.
வாரத்தின் ஏழு நாட்கள்
வாரத்தில் இருக்கக்கூடிய ஏழு நாட்களும் நவகிரகங்களில் இருக்கக்கூடிய ஏழு கிரகங்களையும் குறிக்கிறது. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள் உள்ளது. அந்த குணாதிசயங்களை பொறுத்து நம்முடைய வேண்டுதல் என்ன என்பதை தேர்வு செய்து எந்த கிரகம் அந்த வேண்டுதலுக்கு உரிய கிரகம் என்பதை பொறுத்து அந்த கிரகத்திற்குரிய கிழமையில் ஹோரையில் வழிபாடு செய்தால் அதற்கான பலன் சீக்கிரத்திலேயே கிடைக்கும். வேலை தொடர்பான காரியங்களுக்கு சூரிய பகவானை வழிபாடு செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் வேண்டுதலை முன் வைக்கலாம். வேண்டுதல் வைக்கும் போது நிச்சயமாக தீபம் ஏற்றுவோம் அந்த தீபத்திலும் ஒரு சூட்சமமான வழிமுறை உள்ளது அதனை பின்பற்றினால் நிச்சயம் நல்லதே நடக்கும்.
நல்லெண்ணெய் தீபம்
ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஏற்றவாறு நெய் நல்லெண்ணெய் வைத்து தீபம் ஏற்றி வழிபடுவார்கள். அந்த வகையில் கர்மவினைகள் தீருவதற்காக பயன்படுத்தக்கூடிய எண்ணெய் தான் நல்லெண்ணெய். நல்லெண்ணெயுடன் சந்தனாதி தைலத்தையும் சேர்த்து தீபம் ஏற்றினால் அந்த தீபத்திலிருந்து வரக்கூடிய வாசனை நேர்மறை ஆற்றலை அதிகரித்து எதிர்மறை ஆற்றலை அழிக்கும்.
தீபம் ஏற்ற வேண்டிய முறை
ஒரு அகல் விளக்கு எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் அளவிற்கு சந்தனாதி தைலம் போற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த சுடரொளியை பார்த்தவாறு உங்களுடைய வேண்டுதல்கள் அனைத்தையும் கூறினால் உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். உங்களுடைய ஒவ்வொரு வேண்டுதலுக்கும் அதற்குரிய கிரகத்திற்கு உரிய நாட்களில் உரிய கிழமைகளில் இந்த தீபத்தை ஏற்றுவது நல்லது. வீட்டில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் இதே முறையில் விளக்கு ஏற்றுவது மிக மிக நல்லது.
இதனையும் படியுங்கள் : கடனை முழுமையாக அடைக்கும் கோ பரிகாரம்


