பணத்தை அனைத்தையும் சாதிக்க முடியாது என்பார்கள். ஆனால் நிஜத்தில் அப்படி யாருக்கும் நடப்பது கிடையாது. பணம் இருந்தால் பல விஷயங்களை மாற்றி விடலாம். நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் பல கஷ்டங்களை தீர்க்க வழி ஏற்படுத்த முடியும் என்ற கால கட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பண வரவு அதிகரிக்காமல், செலவு மட்டும் அதிகரிக்கிறது என்ற கவலையில் இருப்பவர்கள் தான் அதிகம். பணம் சேர வேண்டும், பணத்திற்கு குறைவு இல்லாமல் இருக்க வேண்டும் என பல வழிபாடுகள், பரிகாரங்கள் ஆகியவற்றை பலரும் செய்வது உண்டு. இருந்தாலும் அனைவருக்கும் அது பலன் தருவது கிடையாது. ஆனால் அனைவருக்கும் பலன் தரும், பணத்தை ஈர்க்கும் அற்புதமான வழிபாட்டை இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.

பணம் தரும் தீப வழிபாடு
இந்து மதத்தில் ஒருவருக்கு பணம் சேருவதற்கும், செல்வத்தை வாரி வழங்குவதற்கும் என சில கிரகங்களும், கடவுள்களும் உள்ளது. இவை இரண்டையும் முறையாக வழிபட்டால், அதற்கான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்கென பெரிய வழிபாடுகள் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வழிபட்டால் போதும், சகல விதமான நன்மைகளையும் பெறுவீர்கள். இப்படி பணம் தொடர்பாக ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் தீர்வதற்கு தினமும் வீட்டில் ஏற்ற வேண்டிய ஒரு தீபத்தை பற்றி இந்த ஆன்மீக பதிவில் பார்ப்போம்.
வழிபாட்டு முறை
இந்த வழிபாட்டை செய்வதற்கு காலையில் எழுந்ததும் முகம், கை கால் கழுவி விட்டு பல் துலக்கி விட்டு உங்களுடைய சமயலறையில் 6:00 மணியிலிருந்து 6:22 மணி வரை மண் விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். சமையலறையில் தீபம் ஏற்றி 22 நிமிடங்கள் கழித்து பூஜையறையிலும் தீபம் ஏற்றி ஒரு சாம்பிராணியை வைக்கலாம். இந்த விளக்கை குளித்து விட்டு தான் ஏற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. பெண்கள் தங்களுடைய மாதவிடாய் காலத்தில் சுட இந்த விளக்கை ஏற்றலாம். ஆனால் மாதவிடாய் காலத்தில் பூஜையறையில் தீபம் ஏற்றுவதை தவிர்த்து விட வேண்டும். பெண்கள் சமையல் ஆரம்பிப்பதற்கு முன், சமையலறையில் ஒரு மண் அகல் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு சமையலை தொடங்குவது ரொம்ப நல்லது. இந்த வழிபாட்டை தொடர்ந்து 48 நாட்கள் செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் தரித்திரமானது முழுமையாக விலகி உங்கள் குடும்ப கஷ்டங்கள் நீங்கி உங்களுக்கான நல்லது உங்கள் வீடு தேடி வரும் நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து பலன் பெறுங்கள்.
இதனையும் படியுங்கள் : அடமான நகையை திருப்ப பைரவர் வழிபாடு


