ஒருவருக்கும் இருக்கக்கூடிய பண தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் அதற்காகத்தான் உயிர் வரும் வேலைக்கு போய் சம்பாதிக்கிறார்கள். ஒரு சிலருக்கு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஒரு சிலருக்கு வேலை இல்லா திண்டாட்டம் இருக்கும் அவர்கள் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்று நினைப்பார்கள்.

தொழில்
தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான முதலீடு வேண்டும் தொழிலை பற்றிய சரியான அறிவுரை வேண்டும் அதனுடைய நுணுக்கங்கள் வேண்டும் இதனை எல்லாம் சமாளித்து தொழிலில் இருக்கக்கூடிய போட்டிகளை சமாளித்து அதனை லாபகரமாக நடத்த வேண்டும். ஆனால் ஒரு சிலர் தொழில் தொடங்கியதும் நஷ்டம் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புகளும் உள்ளது தொழில் தொடங்குவதற்கு நிறைய சவால்கள் உள்ளது. அந்த சவால்களில் ஏதாவது ஒன்றை நாம் தவறவிட்டாலும் கூட நம் தொழில் முடங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது அதனால் முடிந்த பணம் மூங்கில் ஆகிப் போகலாம். இந்த பிரச்சனைகளை சமாளிக்க செய்ய வேண்டிய எளிமையான பரிகாரத்தை பற்றி பார்க்கலாம்.
தொழில் முடக்கம் பணம் முடக்கம் நீங்க தீப வழிபாடு

நமக்கு ஏதாவது ஒரு இடத்தில் அடிபட்டு விட்டால் நாம் அம்மா என்றுதான் கூறுவோம் அதேபோல் நாம் வாழ்க்கையில் நமக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் குலதெய்வத்தை தான் நாம் அழைக்க வேண்டும், அடுத்ததாக தான் இஷ்ட தெய்வத்தை கூட அழைக்க வேண்டும். அந்த வகையில் குலதெய்வத்தின் கோவிலுக்கு சென்று இந்த ஒரு தீப வழிபாட்டை செய்வது மிகவும் நல்லது. குலதெய்வ கோவில் மிகவும் தூரத்தில் உள்ளது என்றால் இஷ்ட தெய்வத்திற்கு இந்த தீப வழிபாட்டை செய்யலாம்.
பௌர்ணமி தீபம்
இந்த தீபத்தை நாம் பௌர்ணமி அன்று தான் ஏற்ற வேண்டும் பௌர்ணமி அன்று அருகில் இருக்கக்கூடிய குலதெய்வ கோவில் அல்லது இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று உங்களால் முடிந்த பொருட்களை கோவிலுக்கு வாங்கி கொடுக்கலாம். அதோடு 27 புது அகல் விளக்குகளை வாங்கி சுத்தம் செய்து அதில் சுத்தமான பசுமையை ஊற்றி பச்சை நிற திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றிவிட்டு குலதெய்வத்தை மனதார நினைத்து குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது நம்முடைய பிரச்சனைகளை தெய்வத்திடம் சொல்ல வேண்டும். அப்போது நமக்குள் ஒரு புதிய தெம்பு கிடைக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலகி நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். கோவிலிலேயே அமர்ந்து அங்கு நடக்கும் அபிஷேகத்தில் கலந்து கொள்ளலாம் எப்படி செய்வதன் மூலம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதியாக வாழலாம். அதோடு அந்த பிரச்சனைகளை சமாளிப்பதற்கான ஒரு ஆற்றல் நமக்குள் ஏற்படும் இந்த தீப வழிபாட்டை முழுமனதோடு செய்து பாருங்கள் விரைவில் நல்லது நடக்கும்.
இதனையும் படியுங்கள் : இழந்ததை மீட்டு தரக்கூடிய 21 நாள் பரிகாரம்





