ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை இழந்திருப்பார்கள் உதாரணமாக பணத்தை இழந்திருப்பார்கள் அல்லது பொருளை இழந்திருப்பார்கள் சில பேர் சுயமரியாதையை இழந்திருப்பார்கள் ஒரு சிலர் சொத்தை இழந்து இருப்பார்கள். இன்னும் ஒரு சிலர் அவர்களுடைய தாய், தந்தை மனைவி தங்கை உடன் பிறந்தவர்கள் என அனைவரையும் பிரிந்து வாழ்வார்கள் இப்படி வாழ்க்கையில் இழந்தவற்றை மீண்டும் பெறுவதற்கு ஒரு எளிமையான வழிபாட்டை செய்தால் போதும் ஆண்கள் 48 நாட்களும் பெண்கள் 21 நாட்களிலும் இழந்ததை திரும்பப் பெறுவதற்கு இந்த பரிகாரத்தை செய்யலாம்

இழந்ததை மீட்டு தரும் பரிகாரம்
தினமும் அதிபிரம்ம முகூர்த்தமான 3 மணியில் இருந்து நான்கு முப்பது மணி வரை உள்ள நேரத்தில் இந்த குறிப்பிட்ட வழிபாட்டை செய்வது மிகவும் நல்லது. அதிகாலை எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் இரண்டு மண் அகல் விளக்குகளை வைத்து இலுப்பை எண்ணெய் ஊற்றி தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி நீங்கள் எதை இழந்தீர்களோ அது திரும்பவும் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டி கொள்ளுங்கள்.

ஏதாவது ஒன்றிற்காக மட்டுமே இந்த வழிபாட்டை செய்ய வேண்டும் நீங்கள் நகை பணம் வேலை என எது இழந்து இருந்தாலும் அதனை திரும்ப கிடைக்க வேண்டும் என்று பத்து நிமிடங்கள் கண்களை மூடி பிரபஞ்சத்திடம் சொல்லி பிரார்த்தனை செய்ய வேண்டும் பெண்கள் 21 நாட்கள் தொடர்ந்து விளக்கு போட வேண்டும் ஆண்கள் 48 நாட்கள் தொடர்ந்து விளக்கு போட வேண்டும்.
எருக்கன் செடி
விளக்கு ஏற்றுவதோடு மட்டுமில்லாமல் உங்கள் வீட்டின் அருகே ஏதாவது எருக்கன் செடி இருந்தால் அதில் உள்ள மொட்டுக்களை அழுத்தினால் பட்டென வெடிக்கும் மொட்டுக்களை பார்த்து மூன்று மொட்டுக்களை அழுத்தி வெடிக்க வைத்து என்னுடைய வேண்டுதல்களை பிரபஞ்சம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்த பிரபஞ்சத்துடைய ஆசீர்வாதம் எனக்கு முழுவதுமாக இருக்கிறது என்று கூறி நான் இழந்ததை மீட்டெடுப்பேன் என்று சொல்லி உடைக்க வேண்டும். விளக்கு போட்டு முடித்தவுடன் இந்த பரிகாரத்தையும் நீங்கள் செய்ய வேண்டும் இந்த இரண்டு விஷயங்களையும் மனதார செய்து விட்டால் போதும் நீங்கள் இழந்ததை மீண்டும் பெற்றுவிடலாம் இந்த வழிபாட்டை என்று வேண்டுமானாலும் தொடங்கலாம். குறிப்பாக வெள்ளிக்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமைகளில் தொடங்கினால் சிறப்பானது. இதில் உங்களுக்கு ஏற்ற நாளை பார்த்து தொடங்கலாம்.
இதனையும் படியுங்கள் : தரித்திரம் நீங்கி பணவரவை கொடுக்கும் வெற்றிலை பரிகாரம்




