நிறைந்த செல்வத்தை பெற ஏற்ற வேண்டிய தீபம்!!

- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் நன்றாக வாழ்வதற்கு பணம் தான் மிகவும் முக்கியம். ஆனால் பணம் எவ்வளவு இருந்தாலும் ஒரு சில விஷயங்களை நம்மால் வாங்கவே முடியாது. அப்படிப்பட்ட செல்வங்களை நாம் பெற வேண்டுமென்றால் தெய்வத்துடைய அருள் நமக்கு பரிபூரணமாக தேவைப்படும் பணத்தால் வாங்க முடியாத செல்வத்தை பெறுவதற்கு விநாயகப் பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரலாம். அதனைப் பற்றி விரிவாக இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

பணத்தால் பெற முடியாத விஷயங்கள்

அனைவரும் வாழ்க்கையில் பணத்தை நோக்கித்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். பணத்தை சம்பாதிப்பதற்கான காரணம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு எந்த வித கஷ்டமும் வரக்கூடாது என்பதற்காகத்தான். எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் அந்த கஷ்டத்தை சரி செய்ய வேண்டும் என்றால் பணம் தேவைப்படும் பணத்தால் சாதிக்க முடியாத எவ்வளவு விஷயங்கள் இந்த உலகத்தில் உள்ளது. அப்படிப்பட்ட விஷயங்களாக கருதப்படுபவை உடல் ஆரோக்கியம் குழந்தை பாக்கியம் நிம்மதியான உறக்கம், நிம்மதியான வாழ்க்கை இவைதான். இப்படி பணத்தால் நம்மால் பெற முடியாத சில விஷயங்களை பெறுவதற்கு விநாயகப் பெருமாள் வழிபாடு மிகவும் முக்கியம்.

- Advertisement -

விநாயகர் வழிபாடு

விநாயகப் பெருமானே வழிபாடு செய்வதற்கு உகந்த நாள் என்னவென்று கேட்டால் அனைத்து நாட்களுமே நல்ல நாள் தான். ஒவ்வொரு நாளும் விநாயகர் பெருமாளை வழிபாடு செய்யும் போது நமக்கு ஒவ்வொரு விதமான செல்வங்கள் கிடைக்கும். எந்த முறையில் வழிபாடு செய்தால் செல்வம் கிடைக்கும் என்பது தான் மிகவும் முக்கியமானது நினைத்து செல்வம் நமக்கு கிடைக்க வேண்டும். விநாயக பெருமானுடைய அருள் நமக்கு முழுமையாக வேண்டும் என்றால் இந்த வழிபாட்டை விநாயகர் பெருமான் உடைய கோவிலில் சென்று செய்வது சிறப்பானது. தொடர்ச்சியாக இந்த வழிபாட்டை எத்தனை வாரங்கள் வேண்டுமானாலும் செய்யலாம்.

நிறைந்த செல்வத்தைப் பெற ஏற்ற வேண்டிய தீபம்

குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் செவ்வாய்க்கிழமை விநாயகருடைய கோவிலுக்கு சென்று இரண்டு அகல் விளக்கில் சுத்தமான பசு நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று கோவிலுக்கு சென்று அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு ஐந்து முக தீபத்தை ஏற்றி வழிபட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் தூக்கம் நன்றாக வரும் செல்வ செழிப்பிற்கு எந்த குறையும் இருக்காது. ஐந்து முக அகல் விளக்கு கிடைக்காத பட்சத்தில் 5 அகல்விளக்குகளை பயன்படுத்தி தீபம் ஏற்றலாம். செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்மனை வழிபாடு செய்வதோடு சேர்த்து விநாயகரையும் சேர்த்து வழிபாடு செய்வது நல்லது.

இதனையும் படியுங்கள் : செல்வம் சேர வீட்டில் வைக்க வேண்டிய செடிகள்

-விளம்பரம்-