நாம் மிகவும் கடினமாக உழைப்பதற்கு காரணம் பணம் சம்பாதிப்பதற்காக தான். பணத்தை சம்பாதிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. உழைப்பிற்கு ஏற்ற பண வரவை பெறாமல் ஒரு சிலர் இன்றும் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார்கள். இன்னும் சிலர் எந்தவித கஷ்டமும் படாமல் எளிதில் பணத்தை சம்பாதித்து விடுகிறார்கள். சம்பாதித்த பணம் வீண் விரயமாகி சேமிப்பாக உயராத நிலையும் ஒரு சிலருக்கு ஏற்படும். பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்வதற்கு விரைவில் பணம் அதிகரிப்பதற்கு தினமும் வீட்டில் ஏற்ற வேண்டிய ஒரு தீபத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

மகாலட்சுமி தாயார்
பணவரவை அதிகரிக்க கூடிய தெய்வமாக திகழ்ந்தவள் தான் மகாலட்சுமி தேவியார் அப்படிப்பட்ட மகாலட்சுமி தேவியார் தாமரை மலரில் வீற்றிருப்பாள். ஒவ்வொரு விதமான தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான மலர்கள் உகந்ததாக இருக்கும். ஆனால் தாமரை மலர் அனைத்து தெய்வங்களுக்கும் உகந்ததாக இருக்கும். தாமரை மலரை நாம் எந்த அளவிற்கு கோவிலுக்கு வாங்கி தருகிறோமோ அந்த அளவிற்கு தெய்வ கடாட்சம் ஏற்படும். அப்படிப்பட்ட தாமரை மலரை நாம் பயன்படுத்துவதன் மூலம் பணவரவு அதிகரிக்கும் அதனை பற்றி பார்க்கலாம்.
தீபம் ஏற்ற வேண்டிய முறை
வீட்டில் தினமும் தீபம் ஏற்றி மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்தாலும் இந்த ஒரு தீபத்தை தனியாக ஏற்றினால் பணவரவு அதிகரிக்கும். ஒரு தட்டை எடுத்து அதில் நெல்லை பரப்பி அதற்கு மேல் அகல் விளக்கு வைத்து அதில் பாதி தேங்காய் எண்ணெய் பாதி நெய் ஊற்றி அதில் தாமரை தண்டு திரியை போட வேண்டும். பிறகு அதில் மூன்று சொட்டு தேன் விட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தெய்வங்களின் அருளால் பணவரவு உண்டாகும்.
தாமரை தண்டு திரி தீபம்
தாமரை தண்டு திரி கிடைக்கவில்லை என்றால் தாமரை விதைகளை அந்த எண்ணெயில் போட்டு தீபம் ஏற்றலாம். தாமரை விதைகளை கடையிலிருந்து வாங்கி வந்து அப்படியே உபயோகப்படுத்தாமல் பசும்பாலில் சேர்த்து கழுவி காயவைத்து பிறகு எண்ணெயில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை வெள்ளிக்கிழமை என்று ஏற்றலாம் அல்லது பெருமாளுக்கு உரிய ஏகாதசி என்று தீபம் ஏற்றலாம். பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றலாம். ராகு காலம் எமகண்ட நேரத்தை தவிர்த்து விட்டு மீதி நேரத்தில் ஏற்றலாம். இந்த எளிமையான தீப வழிபாட்டை முழுமனதோடு தினமும் செய்தால் பண வரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கி பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : கடன் தீர்க்கும் தோரண கணபதி வழிபாடு!!


