Home ஆன்மீகம் பணம் வைக்கும் இடத்தில் இந்த மர குச்சியை மட்டும் வையுங்கள்! பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!

பணம் வைக்கும் இடத்தில் இந்த மர குச்சியை மட்டும் வையுங்கள்! பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!

பணம் என்பது நம்மிடம் நிறைய சேர வேண்டும் என்றாலும் வீட்டில் இருக்கும் தங்கம், செல்வங்கள் என அனைத்தும் பெருகிக்கொண்டே இருக்க வேண்டும் என்றால் அதற்கு நமக்கு முக்கியமாக மகாலட்சுமியின் அருள் தேவைப்படும். ஏனென்றால் இந்த உலகில் உள்ள அனைத்து செல்வங்களுக்கும் சொந்தக்காரி மகாலட்சுமி தாயார் மட்டுமே. மகாலட்சுமி தாயாரின் அருள் மட்டும் கிடைத்து விட்டால் போதும் குப்பையில் இருக்க ஒருவன் கூட கோடீஸ்வரன் ஆவான். அவளின் அருள் இல்லாதவன் கோடீஸ்வரனாக இருந்தாலும் கூட குப்பைக்கு தான் செல்வான். அதனால் உங்கள் வீட்டிலும் பணம் கட்டு கட்டாக சேர வேண்டும் என்றால் பணம் வைக்கும் இடத்தில் இந்த ஒரு குச்சியை மட்டும் சேர்த்து வையுங்கள். அது என்ன குச்சி ? நாம என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

தெய்வீக வாசம்

பொதுவாக ஒவ்வொரு மரங்களிலும் அதன் கிளைகள் மற்றும் வேர்கள் என அனைத்திலும் பல்வேறு வகையான நல்ல குணங்கள் இருக்கும் அப்படி இருக்கும் மரங்களில் சில மரங்களில் தெய்வீக சக்தியும், தெய்வீக வாசமும் நிறையவே காணப்படும். அப்படி தெய்வீக வாசம் நிறைந்துள்ள மர குச்சிகளை நம் வீட்டில் பணம் வைத்து இருக்கும் இடத்தில் சேர்த்து வைப்பதன் மூலம் நமது வீட்டில் வீண் விரயமாக பணம் தடுக்கப்பட்டு நமது வீட்டில் மென்மேலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

மர குச்சிகள்

மேலும் பணத்தின் அருகே இந்த குச்சியை வைப்பதன் மூலம் நல்ல விஷயங்களுக்காக பணம் செலவாவதற்கு இது வழிவகுக்கும். அதனால் நம் வீட்டில் சுப காரியங்கள் மற்றும் நல்ல விஷயங்களும் நடக்கும். அந்த வகையில் மகாலட்சுமியின் அம்சமான நெல்லி மரம் மகாலட்சுமி வாசமும், மல்லிகை மரம் குபேரரின் வாசமும், புளியமரம் துர் தேவதைகளை விரட்டி அடிக்கும் தெய்வீக வாசமும் நிறைந்தது என சாஸ்திரங்கள் கூறுகின்றனர்.

-விளம்பரம்-

மூன்று மர குச்சிகளையும்

அதனால் இந்த மூன்று மரத்தின் குச்சிகளையும் எடுத்துக்கொண்டு அதை ஒரு மஞ்சள் நிற நூல்கள் ஒன்று சேர கட்டிக் கொள்ளுங்கள். பின்பு நீங்கள் பணம் வைத்து இருக்கும் இடங்களில் எல்லாம் இந்த குச்சியை வைத்து விடுங்கள் இப்படி நீங்கள் வைப்பதன் மூலம் உங்கள் வீட்டில் பணம் என்பது கட்டு கட்டாக சேர்ந்து கொண்டே இருக்கும். உங்கள் வீட்டில் செல்வ வளங்கள் உயர்ந்து உங்கள் வாழ்வின் பொருளாதார நிலையை உயர்த்தி விடும். அது மட்டுமில்லாமல் இந்த மூன்று குச்சிகளை பணம் வைக்கும் இடத்தில் வைத்து தினசரி அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து. தினமும் தூபம் காண்பித்து வரும் பொழுது உங்கள் வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் என்பது முழுமையாக கிடைத்துவிடும்.

தொழில், வியாபாரம்

நீங்கள் தொழில் அல்லது வியாபாரம் செய்து வருபவராக இருந்தால் நீங்கள் இந்த மூன்று மர குச்சிகளை நீங்கள் பணம் வைத்திருக்கும் கல்லாப்பெட்டி அல்லது லாக்கரில் வைத்து கொள்ளலாம். நீங்களும் தினமும் இந்த குச்சிகளுக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து தினமும் சாம்பிராணி தூபம் காண்பித்து கூடுதலாக மகாலட்சுமி திருவுருவ படத்தை வைத்து அதள்கு நெய்விளக்கு ஏற்றி கற்கண்டை நெய் வைத்தியமாக படைத்து பூஜை செய்து வரும் பொழுது உங்கள் வியாபாரத்திலும் தொழிலும் உங்களுக்கு வராமல் தடைபட்டுக் கொண்டிருக்கும் பணம் தடை இல்லாமல் உங்கள் கைக்கு வந்து சேரும் இதனால் நீங்கள் தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தின் பொருளாதார நிலை உயரும்.

குங்கும தானம்

மேலும் உங்களுக்கு எவ்வளவு தான் கஷ்டமான சூழ்நிலையாக இருந்தாலும் அதை தவுடு பிடியாக்கி ஒன்னும் இல்லாதவர்களிடம் கூட பணம் சேர்ந்து அவர்களின் வாழ்வின் பொருளாதார நிலை உயர வேண்டுமென்றால் வியாழக்கிழமை அன்று கடையில் காசு கொடுத்து குங்குமம் வாங்கிக் கொள்ளுங்கள். இப்படி வாங்கிய குங்குமத்தை நீங்கள் வெள்ளிக்கிழமை அன்று அம்மன் கோவிலுக்கு சென்று சன்னதியில் உள்ள அர்ச்சகர் இடம் தானமாக கொடுத்து விடுங்கள் இப்படி நீங்கள் மகாலட்சுமிக்கு வாரதோறும் குங்குமத்தை தானமாக கொடுத்து வரும் பொழுது அவளின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைத்து உங்களை பிடித்திருக்கும் கிரகங்கள், பீடை என அனைத்தும் ஒலிந்து உங்கள் வாழ்வை ஒளிமயமாக இருக்கும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here