- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
விடுமுறை நாட்கள் என்றாலே பெரும்பாலானோரின் வீட்டில் சிக்கன், மட்டன் சமைக்கும் வழக்கம் இருக்கும். அசைவங்களில் நிறைய வகைகள் இருந்தாலும், அனைவரும் விரும்பி உண்பது மட்டன். மட்டனில் பல வகை உணுவுகளை தயார் செய்யலாம். மட்டனை பயன்படுத்தி நமக்கு பிடித்த பல விதவிதமான ரெசிபிகளை செய்து அசத்த முடியும். அதிலும் முக்கியமாக இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் விதவிதமான சுவையிலும் விதவிதமான முறையிலும் மட்டன் சமைக்கப்படுகிறது. நீங்கள் இன்று மதியம் மட்டன் செய்ய நினைத்தால், திண்டுக்கல் மட்டன் கிரேவி செய்யுங்கள். இந்த மட்டன் கிரேவி சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
குறிப்பாக இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் சுலபமான செய்முறையைக் கொண்டது. இந்த கிரேவி மசாலா அரைத்து செய்யப்படும் அசைவ உணவு. இது ரசம் சாதம், நெய் சோறு, பிரியாணி, சப்பாத்தி, தோசை, ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். மட்டன் கிரேவி நாம் பலவிதமாக செய்யலாம், செட்டிநாடு மட்டன் கிரேவி, மதுரை மட்டன் கிரேவி, கிராமத்து மட்டன் கிரேவி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக செய்யப்படுகிறது. முக்கியமாக மசாலாக்கள் நிறைந்த காரமான சுவையை அனுபவிக்க விரும்பும் மசாலா பிரியர்களுக்கு இந்த திண்டுக்கல் மட்டன் கிரேவி மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். முக்கியமாக மழைக்காலங்களில் இந்த திண்டுக்கல் மட்டன் கிரேவி சாப்பிடுவது அற்புதமான ஒரு அனுபவத்தை கொடுக்கும். இந்த பதிவில் திண்டுக்கல் மட்டன் கிரேவி எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீடே மணக்கும் சுவையான திண்டுக்கல் ஸ்டைல் குஸ்கா இப்படி செய்து பாருங்கள் இனிமேல் அடிக்கடி செய்வீர்கள்!!!
Ingredients
Method
முதலில் மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு குக்கரில் சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு இரண்டு முதல் நான்கு விசில் விட்டு வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும்.
இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு, கல்பாசி, அன்னாசி பூ, பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் வேகவைத்துள்ள மட்டனை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பிறகு மிளகு தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
பின் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு 15 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும்.
மட்டன் வெந்து கிரேவி நன்கு தண்ணீர் வற்றி வந்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான திண்டுக்கல் மட்டன் கிரேவி தயார்.






