பொதுவாக நாம் வீடுகளில் எதற்காக விளக்கு ஏற்றுகிறோம் தெரியுமா நாம் பூஜை அறையில் பிரார்த்தனை செய்யும்போது நாம் ஏற்றும் விளக்கில் ஜோதி வடிவில் நாம் வேண்டும் தெய்வங்கள் வந்து அமர்ந்து நமது பிரார்த்தனைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்வார்கள். மேலும் நம் வீட்டில் ஏற்றும் விளக்கு எப்படி வீட்டில் உள்ள இருளை நீக்கி வீட்டுக்கு வெளிச்சத்த தருகிறதோ. அதுபோல நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள், கெட்ட சக்திகள் போன்றவற்றை நீக்கி நமது வாழ்க்கையே ஒளிமயமாக எடுத்துச் செல்லும். ஆனால் இப்படி நம்ப விளக்கேற்றிய பிறகு தப்பி தவறியும் கூட சில விஷயங்களை நாம் செய்யக்கூடாது. அது என்னென்ன விஷயங்கள் என்று இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

விளக்கேற்றிய பிறகு தலை சீவக் கூடாது.
விளக்கேற்றிய பிறகு கூட்டக் கூடாது.
விளக்கேற்றிய உடன் சுமங்கலிப் பெண் வெளியே செல்லக் கூடாது.
விளக்கேற்றிய உடன் சாப்பிடக் கூடாது.
விளக்கேற்றும் நேரத்தில் உறங்க கூடாது.
விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவை கொடுக்கக் கூடாது.
விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.
விளக்கேற்றி விட்டு உடன் தலை குளிக்கக் கூடாது.

இனி உங்கள் வீட்டில் இதுபோல விளக்கு ஏற்றியவுடன் மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களை செய்யாமல் தவிர்த்து வந்தாலே போதும் உங்கள் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் விலகி நல்ல சக்திகள் வீடு முழுவதும் நிரம்பி காணப்படும். இதனால் உங்கள் வீடு லட்சுமி கடாட்சம் ஆகும்
Super information pls continue