பல நேரங்களில் நாம் தூங்கும்போது கனவுகள் வரும். சில கனவுகள் சாதரணமாகவும், சிலவை மிகவும் பயங்கரமானதாகவும் இருக்கும். இந்த கனவுகள் எல்லாம் வாழ்க்கையுடன் ஒத்து போவதாக கனவு சாஸ்திரம் சொல்கிறது. கனவுகளுக்கான பலன்கள் பழமையான சாஸ்திரங்களில் உள்ளது. நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்கிறது கனவு சாஸ்திரம். ஆனால், அந்த பலன்கள் உடனுக்குடன் தெரிய வாய்ப்பில்லையாம். கனவுகள் என்பது நாம் செய்ய தவறியவை மற்றும் நாம் நடக்கவேண்டும் என எண்ணியவையாக இருக்கலாம். ஆசையின், உணர்வின் விளைவுகள் ஆகும். அந்த கனவின் அர்த்தம் என்னவென்று தெரியாமல் நாம் குழம்புவோம். இங்கு கனவின் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. இந்த கனவுகள் வந்தால் உங்களுக்கு ராஜயோகம் அதிர்ஷ்டம் வரப்போவதை உணர்த்தும் அறிகுறிகள் என ஜோதிடம் கூறுகிறது. அது என்ன கனவுகள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
ஜோதிடர்
கனவில் ஜோதிடரை கனவில் காண்பது பொதுவாக ஆன்மீகத்தில், எதிர்காலம் பற்றி கவலை, அல்லது உங்களுக்கு வழிகாட்டல் தேவைப்படும் போது அவர்கள் உங்களை வழிகாட்டுவார் அர்த்தங்களை குறிக்கக்கூடும். ஜோதிடரை கனவில் பார்த்தால் நீங்கள் நினைத்த காரியம் சற்று தாமதமாக நடக்கும். ஆனால் நடந்துவிடும். நடக்கும் காரியம் சீக்கிரம் நடந்தே தீரும் என்று பலன்.
குரு
ஒருவரது உறக்கத்தில் தன்னுடைய குருவை கண்டால் அந்த நபருக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் நீங்கி பொன், பொருள், ஆடை, சொத்து சேர்க்கை உண்டாகும் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பார் என்று கூறப்படுகின்றது. பல நேரங்களில் மக்கள் சில ஆன்மீக நடைமுறைகளில் ஈடுபடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் குரு தரிசனம் செய்வது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. ஒருவர் தனது ஆன்மீக குருவை கனவில் கண்டால், அந்த நபர் எதிர்காலத்தில் ஆன்மீக பயிற்சியில் வெற்றி பெறுவார் என்று அர்த்தமாம்.
பூசாரி
நீங்கள் ஒரு பூசாரியை கனவில் கண்டால் நீங்கள் நினைத்த காரியம் சற்று தாமதமாக நடந்தாலும் முடிவில் வெற்றி அடையும் என்பதை குறிக்கிறது. நீங்கள் உங்கள் கனவில் பூசாரியை கண்டால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் கைகூடிவரும் நினைத்த நற்செய்தி கிடைக்கும் என்று அர்த்தம். அதுமட்டுமல்லாது ஒருவர் தூக்கத்தில் பூசாரியை கண்டால் அந்த நபரது பொருளாதார வாழ்க்கை நிலை உயரும் என்று கூறப்படுகின்றது. அதனால் பூசாரியை கனவில் கண்டால் மங்களகரமானதாகவே கருதப்படுகிறது. இதனால் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் செல்ல போகிறீர்கள் என்று அர்த்தமாம்.
இதனையும் படியுங்கள் : வாழ்க்கையில் அதிர்ஷடம் வர போவதை முன்னக்கூடியே உணர்த்தும் கனவுகள் ? என்னெ்ன கனவுகள் தெரியுமா ?