காரசாரமான சுவையில் முருங்கை ஊறுகாய் ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!

முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன. மிக எளிதில் கிடைக்கக்கூடிய அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள காய்களில் முருங்கைக்காய்க்கு என்றுமே இடமுண்டு. உடலுக்கு நல்ல வலுவை கொடுக்கும் முருங்கைக்காய், மலச்சிக்கல், வயிற்று

By Prem Kumar · 12/4/2024

முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன. மிக எளிதில் கிடைக்கக்கூடிய அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள காய்களில் முருங்கைக்காய்க்கு என்றுமே இடமுண்டு. உடலுக்கு நல்ல வலுவை கொடுக்கும் முருங்கைக்காய், மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகிறது.

இதனை வைத்து சுவையான ஊறுகாய் செய்வது எப்படி என பார்க்கலாம். கடைகளில் வாங்கும் ஊறுகாயில் பிரசர்வேட்டிவ்கள் சேர்க்கப்பட்டிருக்கும். கடைகளில் விற்கும் பாட்டில் ஊறுகாயில் சுவை அதிகரிப்பதற்காக சுவையூட்டிகள் சேர்ப்பார்கள். அது உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தும். இதற்கு பதிலாக சுகாதாரமான முறையில் நாமே வீட்டில் செய்தால் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்கும். மேலும், நிறைய பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

இனி‌ வரப்போகிற வெயில் காலத்தில் கண்டிப்பா நம் வீடுகளில் வாரத்திற்கு 2 முறை தயிர் சாதம், மோர் சாதம் செய்வது நிச்சயம். அதற்கு தொட்டுக் கொள்ள முருங்கைக்காய் ஊறுகாய் சூப்பரான காமினேஷன். முருங்கைக்காய் சாம்பார், அதைவிட்டா முருங்கைக்கீரை பொரியல், முருங்கையில் வேற என்ன செய்துட முடியும் என அலுத்து கொள்பவர்களுக்கு தான்‌ இந்த முருங்கைக்காய் ஊறுகாய் ரெசிபி. நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முருங்கைக்காயை வைத்து வீட்டிலேயே சுவையான முருங்கைக்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : முருங்கைக்காய் மசாலா கூட்டு இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full