குக் வித் கோமாளி புகழ், பிரியங்கா செய்த முருங்கைக்காய் பூரி இப்படித்தான் செய்யணும்!

- Advertisement -

ஒரு சிலருக்கு பூரி அப்படின்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஃபர்ஸ்ட் ல நமக்கு பூரி நா கோதுமை மாவுல செஞ்ச பூரி மட்டும் தான் ஆனா இப்போ குழந்தைகள் காய்கறிகள் சாப்பிடாமல் இருக்கிறதால அந்த காய்கறிகளை வேக வச்சு அரைச்சு அதை அப்படியே கோதுமை மாவுல சேர்த்து பிசைந்து சப்பாத்தி பூரின்னு போட்டு கொடுத்துட்டா, குழந்தைகளுக்கு ஒண்ணுமே தெரியாது சாப்பிட்ட மாதிரியும் இருக்கும் அதே நேரத்துல காய்கறிகள் கொடுத்த மாதிரியும் இருக்கும். அந்த வகையில பீட்ரூட் சப்பாத்தி பீட்ரூட் பூரி இதெல்லாம் ஒரு சிலர் செஞ்சு இருப்பீங்க ஆனா குக் வித் கோமாளில பிரியங்கா செஞ்ச முருங்கைக்காய் பூரி இன்னிக்கு நம்ம பாக்க போறோம்.

-விளம்பரம்-

அந்த பூரி எப்படி செஞ்சிருப்பாங்க அப்படின்னு உங்களுக்கு எந்த குழப்பமும் வேண்டாம் இப்ப நம்ம சொல்ல போற இந்த செய்முறைல செஞ்சா போதும் உங்களுக்கு முருங்கைக்காய் பூரி சூப்பரா கிடைக்கும். இந்த முருங்கைக்காய் பூரிக்கு சட்னி உருளைக்கிழங்கு குருமா பட்டாணி குருமா முட்டை குருமா சிக்கன் குருமா எல்லாமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஒரே ஒரு தடவை மட்டும் இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பா அடுத்தடுத்து உங்களுக்கு சாப்பிடணும்னு தோணும். அதுவும் சிக்கன் குருமா மட்டும் வெச்சு சாப்பிட்டீங்கன்னா அவ்ளோ ருசியா இருக்கும். பாக்குறதுக்கு வெறும் பூரி மாதிரி தான் இருக்கும்.

- Advertisement -

நம்ம அதுல முருங்கைக்காய் சேர்த்து இருக்கோம் அப்படி என்றே தெரியாது ஆனா சாப்பிட்டு பார்த்தா டேஸ்ட் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் ஆனா அதுல என்ன சேர்த்து இருக்கோம் அப்படின்னு கண்டுபிடிக்கவே முடியாது. அந்த அளவுக்கு ருசியா இருக்கும். உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே இத செஞ்சு கொடுங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க முக்கியமா வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் செஞ்சு கொடுங்க. சுவையான இந்த பூரிய எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க உங்க வீட்ல ஒரு வேளை நிறைய முருங்கக்காய் இருக்கு அதை என்ன செய்யறதுன்னு தெரியல அப்படினா கண்டிப்பா இந்த மாதிரி ஒரு தடவை பூரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க இப்ப வாங்க இந்த ருசியான முருங்கைக்காய் பூரி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

Print
No ratings yet

முருங்கைக்காய் பூரி | Drumstick Poori Recipe In Tamil

ஒரு சிலருக்கு பூரி அப்படின்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஃபர்ஸ்ட் ல நமக்கு பூரி நா கோதுமை மாவுல செஞ்ச பூரி மட்டும் தான் ஆனா இப்போ குழந்தைகள் காய்கறிகள் சாப்பிடாமல் இருக்கிறதால அந்த காய்கறிகளை வேக வச்சு அரைச்சு அதை அப்படியே கோதுமை மாவுல சேர்த்து பிசைந்து சப்பாத்தி பூரின்னு போட்டு கொடுத்துட்டா, குழந்தைகளுக்கு ஒண்ணுமே தெரியாது சாப்பிட்ட மாதிரியும் இருக்கும் அதே நேரத்துல காய்கறிகள் கொடுத்த மாதிரியும் இருக்கும். அந்த வகையில பீட்ரூட் சப்பாத்தி பீட்ரூட் பூரி இதெல்லாம் ஒரு சிலர் செஞ்சு இருப்பீங்க ஆனா குக் வித் கோமாளில பிரியங்கா செஞ்ச முருங்கைக்காய் பூரி இன்னிக்கு நம்ம பாக்க போறோம். அந்த பூரி எப்படி செஞ்சிருப்பாங்க அப்படின்னு உங்களுக்கு எந்த குழப்பமும் வேண்டாம் இப்ப நம்ம சொல்ல போற இந்த செய்முறைல செஞ்சா போதும் உங்களுக்கு முருங்கைக்காய் பூரி சூப்பரா கிடைக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: Drumstick Poori
Yield: 4 People
Calories: 89kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 2 முருங்கைக்காய்
  • 1 கப் கோதுமை மாவு
  • 1 டீஸ்பூன் ஓமம்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முருங்கைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதற்குள் இருக்கும் சதைப்பகுதியை மட்டும் எடுத்து தனியாக வைக்கவும்.
  • பாத்திரத்தில் கோதுமை மாவு எடுத்து அதனுடன் முருங்கைக்காயின் சதைப் பகுதியை போட்டு உப்பு ஓமம் சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • பிறகு அதனை தேய்த்து சூடான எண்ணெயில் போட்டு எடுத்தால் பூரி தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 89kcal | Carbohydrates: 6g | Protein: 15g | Fat: 2.3g | Saturated Fat: 1.7g | Sodium: 70mg | Potassium: 110mg | Fiber: 4.8g | Vitamin A: 24IU | Vitamin C: 132mg | Calcium: 13mg | Iron: 7mg

இதனையும் படியுங்கள் : பூரிக்கு இந்த வேர்க்கடலை கறி ஒரு தடவை செஞ்சு பாருங்க!