- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
கருவாடுல பல வகைகள் இருக்கு குச்சி கருவாடு, மாசி கருவாடு, பாறை மீன் கருவாடு, பால் சுறா கருவாடு அப்படின்னு நிறைய இருக்கு சொல்லிட்டு போகலாம். அந்த வகையில துண்டு கருவாடு ரொம்ப ரொம்ப சுலபமா எல்லா இடங்களிலும் எல்லா கடைகளிலும் கிடைக்கும். அந்த துண்டு கருவாடு வச்சு நிறைய பேரு பொரியல் மாதிரி செய்வாங்க. ஆனா இப்ப நம்ம துண்டு கருவாடு வச்சு ஒரு சூப்பரான சிம்பிளான பிரட்டல் செய்ய போறோம். இதுக்கு சின்ன வெங்காயம் நமக்கு முக்கியமாக தேவைப்படும் ஒரு மசாலா அரைச்சு நல்லா எண்ணெய் பிரிஞ்சு வர வரைக்கும் வதக்கி அதுல துண்டு கருவாடு சேர்த்து நல்லா பிரட்டி எடுத்தா சூப்பரா இந்த ரெசிபி ரெடியாகி விடும். இந்த டேஸ்டான ரெசிபிக்கு சுட சுட சாதம் இருந்தால் போதும் ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம் அந்த அளவுக்கு செம்ம டேஸ்ட்டா இருக்கும்.
ரசம் வச்சு அதுக்கு சைடு டிஷ் ஆக கூட இந்த துண்டு கருவாடு பிரட்டல் செஞ்சு சாப்பிடலாம் அவ்வளவு ருசியா இருக்கும். சிக்கன் மட்டன் வீட்ல எடுக்காத சமயத்துல இந்த மாதிரி கருவாடு வச்சு சிம்பிளா செஞ்சு பாருங்க ஆனா அட்டகாசமான டேஸ்ட்ல சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். ஒரு தடவை இந்த ரெசிபி ட்ரை பண்ணி பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். இதுக்கு பெருசா எந்த மசாலாக்களும் தேவையில்லை ரொம்ப ரொம்ப சிம்பிளா செய்யக்கூடிய ஒரு ரெசிபி அதனால கண்டிப்பா செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான ருசியான துண்டு கருவாடு பிரட்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான பீர்க்கங்காய் கருவாடு தொக்கு சுட சுட சாதத்துடன் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்!
Ingredients
Method
துண்டு கருவாட்டை சுடுதண்ணீரில் சேர்த்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம் சோம்பு, மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறவும்.
அதில் கழுவி வைத்துள்ள கருவாடு சேர்த்து மூடி போட்டு நன்றாக வேக வைக்கவும்.
வெந்ததும் அனைத்தையும் நன்றாக மசித்து விட்டு கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான துண்டு கருவாடு பிரட்டல் தயார்.






