- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
சுக்கு குழம்பு இதுவரைக்கும் நீங்க வச்சதே இல்ல அப்படின்னா உடனே வச்சு பாருங்க. நம்ம கார குழம்பு வத்த குழம்பு வைக்கிற மாதிரிதான் இந்த குழம்பும் வைக்கணும் கடைசியா சுக்கு நல்லா இடிச்சு சேர்த்து கலந்து இறக்கினால் குழம்பு ரெடி ஆகிவிடும். இதில் சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம், பூண்டு எல்லாமே போட்டு செய்றதால டேஸ்ட் ரொம்பவே அற்புதமாக இருக்கும். இந்த டேஸ்டான சுக்கு குழம்பு ரெசிபி கண்டிப்பா எல்லாரும் வீட்ல ஒரு தடவை ட்ரை பண்ணி பாக்கணும். இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரே ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க.
வெயில் காலம் முடிஞ்சு மழைக்காலம் ஆரம்பிக்கப் போகுது அதனால எல்லாருக்குமே வீட்ல சளி இருமல் காய்ச்சல் வரும். அந்த மாதிரி வரும்போது உடனே மருத்துவமனைக்கு போகாமல் இந்த மாதிரி வீட்டிலேயே கை வைத்தியம் மாதிரி செஞ்சு பார்க்கலாம். சுக்கு சாப்பிடறது உடம்புக்கு ரொம்ப நல்லது செரிமான பிரச்சனைகளையும் சரி செய்யும் அதே சமயத்துல சளி இருமல் இருந்தா அதனையும் சரி செய்யும். சுக்கு வச்சு எப்பவுமே சுக்கு காபி மட்டும் போட்டு குடிக்காம ஒரு தடவை இந்த மாதிரி ஒரு குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க.
புளிப்பா சாப்பிடுறதுக்கே ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். இதுக்கு சைடு டிஷ் தேவைப்படாது. நல்லா சுருக்குன்னு இந்த குழம்பு வச்சு சாப்பிட்டா அவ்வளவு டேஸ்டா இருக்கும். இந்த ருசியான சுக்கு குழம்பு ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை உங்க வீட்டுல செஞ்சு பாருங்க. சளி இருமல் காய்ச்சல் எல்லாமே பறந்து போய்விடும். இந்த சுவையான ரெசிபியை கண்டிப்பா வீட்ல செஞ்சு பாருங்க. சுட சுட சாதத்தில் இந்த குழம்பு ஊத்தி சாப்பிடுறதுக்கு ரொம்பவே டேஸ்டா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்ட்டான மருந்து குழம்புன்னு சொல்லப்படுற சுக்கு குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுக்குவை மிஞ்சிய மருத்துவம் இந்த உலகில் இல்லை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சுக்கு தண்ணீர்!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்க கடுகு உளுந்து பருப்பு வெந்தயம் சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கியதும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளியை நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கியதும் குழம்பு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.
புளி கரைத்து சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
கொதி வந்ததும் சுக்கை நன்றாக இடித்து சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான சுக்கு குழம்பு தயார்.






