ஈரல் கூட்டில் இரண்டு வகைகள் இருக்கு ஒன்னு மட்டன் ஈரல் கூட்டு மற்றொன்று சிக்கன் ஈரல் கூட்டு. ஆனால் சிக்கனை விட மட்டன்ல தான் நிறைய நன்மைகள் இருக்கு. இந்த மட்டன் ஈரல் கூட்டு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி செஞ்சிருப்பீங்க. ஒரு சிலருக்கு ஈரல் சுத்தமா பிடிக்காது ஆனா ஆட்டுக்கறி சாப்பிடுவதை விட இந்த மாதிரி ஈரல், சுவரொட்டி, ஆட்டுக்கால், தலை, மூளை இதெல்லாம் சாப்பிடுறதுனால தான் உடம்புக்கு ஆரோக்கியம் கிடைக்கும். அந்த வகையில மட்டன் ஈரல் சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் இல்லாதவங்களுக்கு நிறைய ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.
கர்ப்பிணி பெண்கள் சின்ன குழந்தைகள் இரும்பு சத்து குறைபாடு இருக்கிறவங்க எல்லாருமே அடிக்கடி ஈரலை சாப்பிடணும். ஒரு சிலர் சுவரொட்டி சாப்பிடுவது நல்லதுன்னு சொல்லுவாங்க ஆனா சுவரொட்டி சாப்பிட பிடிக்கலைன்னா இந்த சூப்பரான ஈரல் கூட்டு செஞ்சு சாப்பிடுங்க ஈரல் பிடிக்காதவங்க கூட இந்த கூட்டு செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க. இதுல சின்ன வெங்காயம், தக்காளி, தேங்காய் இதெல்லாம் அரைச்சு சேர்க்கறதால சாப்பிடுவதற்கு அவ்வளவு டேஸ்டா இருக்கும். சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் ரசம் சாதத்துக்கும் தொட்டுக்க சூப்பரா இருக்கும்.
ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த சூப்பரான ஈரல் கூட்டு ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல இருக்குறவங்களுக்கு செஞ்சு கொடுங்க. ஒரு சிலர் மஞ்சள் சீரகம் அரைச்சு ஊத்தி இந்த ரெசிபியை செய்வாங்க ஆனா இன்னைக்கு நம்ம சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு எல்லாம் சேர்த்து அரைச்சு செய்யப்போறதால சாதத்திலேயே போட்டு பிசைந்து சாப்பிடலாம். கண்டிப்பா ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க பிடிக்கலைன்னு சொல்றவங்க கூட வாங்கி வாங்கி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான ஈரல் கூட்டு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ஈரல் கூட்டு | Eeral Kootu Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கி ஈரல்
- 1 டீஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
- 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- 15 சின்ன வெங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 4 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1 டீஸ்பூன் சோம்பு
செய்முறை
- ஒரு குக்கரில் ஈரல் சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து ஐந்து விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு கறிவேப்பிலை பெரிய வெங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- பிறகு அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கிக் கொள்ளவும்.
- பிறகு ஈரலை சேர்த்து குழம்பு மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து வதக்கி அனைத்தும் நன்றாக வெந்த பிறகு இறக்கினால் சுவையான ஈரல் கூட்டு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : காரசாரமான ஈரல் ப்ரை இப்படி செய்து பாருங்க