- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast, dinner
பொதுவா நம்ம வீட்ல எப்பவுமே என்னதான் பார்த்து பார்த்து செஞ்சாலும் கண்டிப்பா ஏதாவது மீதம் ஆகிடும். அந்த வகையில இட்லி மீதமா இருந்தா அதுல இட்லி உப்புமா செய்வோம் சாதம் மீதம் ஆகிவிட்டால் அதை பழைய சாதமா சாப்பிடுவோம். அந்த வகையில் சப்பாத்தி மீதம் ஆகிவிட்டால் ஒரு சில பேருக்கு என்ன பண்றதுன்னு தெரியாது ஒரு சில பேரு அதுல சக்கரவச்சு சாப்பிட வாங்க ஒரு சில பேரு காரமா ஏதாவது செஞ்சு சாப்பிடுவாங்க.
ஆனா ஒரு தடவை இந்த மாதிரி முட்டை சப்பாத்தி செஞ்சு பாருங்க சாப்பிடுவதற்கு ரொம்ப டேஸ்டா சூப்பரா இருக்கும். உங்க குழந்தைங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. கொத்து பரோட்டா மாதிரி இந்த கொத்து முட்டை சப்பாத்தி அவங்களுக்கு அவ்வளவு பிடிக்கும்.
மீதமான சப்பாத்தில தான் இது செய்யணும் அப்படின்ற அவசியம் இல்ல புதுசா சப்பாத்தி செஞ்சு கூட இந்த முட்டை சப்பாத்தியா உங்க வீட்டு குழந்தைகளுக்கு செஞ்சு கொடுக்கலாம் மதியம் டிபன் பாக்ஸுக்கு இந்த முட்டை சப்பாத்தி வச்சு கொடுத்தீங்கன்னா ஈவினிங் வீட்டுக்கு வரும்போது டிபன் பாக்ஸ் ஃபுல்லா காலி ஆகி கிடக்கும்.
அந்த அளவுக்கு அவங்க சூப்பராக சாப்பிட்டு முடித்து இருப்பாங்க. இந்த மாதிரி கொஞ்சம் டிஃபரண்டா அப்பப்போ குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்தாதான் அவங்களுக்கும் சாப்பாடு மேல ஒரு ஆர்வம் வரும் நமக்கும் ஏதாவது டிஃபரண்டா செஞ்சா தான் சமையல் மேல ஆர்வம் வரும் இப்ப வாங்க இந்த சிம்பிளான டேஸ்டான அட்டகாசமான முட்டை சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : இரவு உணவுக்கு வெஜிடபுள் சப்பாத்தி ஒருமுறை இப்படி செய்து பாருங்க! பின் அடிக்கடி உங்கள் வீட்டில் இதுதான் உணவு!
Ingredients
Method
முதலில் சப்பாத்தியை உங்களுக்கு தேவையான வடிவத்தில் வெட்டி வைத்துக் கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்துக் கொள்ளவும்
இப்பொழுது வெங்காயம் சேர்த்து வெங்காயம் நன்றாக பொன் நிறமாகும் வரை வதக்கி கொள்ளவும்
பிறகு தக்காளி சேர்த்து குழைவாகும் வரை வதக்கி விடவும். தக்காளி வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுதுசேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
பிறகு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா மல்லித்தூள் சேர்த்து நன்றாக கிளறவும். அனைத்தையும் ஓரமாக வைத்துவிட்டு சிறிதளவு கடாயிலேயே எண்ணெய் விட்டு முட்டை சேர்த்து உப்பு போட்டுகலந்து கொள்ளவும்
அனைத்தும் சேர்ந்து நன்றாக வெந்தவுடன் சப்பாத்தியை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அனைத்தையும் ஒன்றாக கிளறவும். இறுதியாக கருவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான முட்டை சப்பாத்தி தயார்






