- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
பாஸ்தா இதுவரைக்கும் நீங்க கடாயில் தான் செஞ்சிருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு தடவை குக்கர்ல செஞ்சு பாருங்க இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் அதுவும் முட்டையும் சீஸும் சேர்த்து எக் சீஸ் பாஸ்தா செய்து பாருங்கள் ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். எப்பவுமே பாஸ்தாவ வேகவைத்து விட்டு அதுக்கப்புறம் தான் சமைப்போம் ஆனால் இந்த மாதிரி குக்கர்ல செய்யும் போது ஒரு விசில் விட்டாலே போதும் பாஸ்தா சூப்பரா வெந்து வந்திருக்கும். இந்த பாஸ்தா ரெசிபி கண்டிப்பா குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஒரு சிலர் காய்கறிகள் எல்லாம் சேர்த்து செய்வாங்க ஒரு சிலர் முட்டை சேர்த்து செய்வாங்க அந்த வகையில முட்டை சேர்த்து கூடவே கொஞ்சமா சீஸ் சேர்த்து செய்த இந்த பாஸ்தா ரொம்பவே வித்தியாசமா இருக்கும்.
குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ்க்கு கொடுத்துவிடலாம் கண்டிப்பா மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு வருவாங்க. நைட் டின்னருக்கும் கூட இந்த பாஸ்தா ரெசிப்பியை குழந்தைகளுக்கு செஞ்சு கொடுக்கலாம். எப்பவுமே குழந்தைகளுக்கு வெளியில கடையில வாங்கி தராமல் வீட்டிலேயே இந்த மாதிரி டேஸ்ட்டா செஞ்சு கொடுத்தா கண்டிப்பா குழந்தைகள் ஹோட்டலில் சாப்பாடு கேட்டு அடம் பிடிக்க மாட்டாங்க இந்த பாஸ்தா ரெசிபி செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி தான். ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறமா அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு செம டேஸ்டா இருக்கும்.
டேஸ்டான சுவையான இந்த பாஸ்தா ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல இருக்குறவங்களுக்கு செஞ்சு கொடுத்து அசத்துங்க. குறிப்பா குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. பாஸ்தா நூடுல்ஸ் மேகி இந்த மாதிரி ஃபாஸ்ட் ஃபுட் எல்லாமே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் இதை வெளியில வாங்கி கொடுக்காம வீட்டிலேயே கொஞ்சம் ஆரோக்கியமாக செய்து கொடுத்தால் நல்லது. இப்ப வாங்க இந்த சுவையான எக் சீஸ் பாஸ்தா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மசாலா சீஸ் சாண்ட்விச் சுட சுட மாலை வேளையில் இந்த மாதிரி செஞ்சு பாருங்க சட்டுனு காலி ஆகிடும்!
Ingredients
Method
ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து மிளகாய் தூள் தனியா தூள் மஞ்சள் தூள் சிக்கன் மசாலா சேர்த்து மிதமான தீயில் வைத்து கலந்து விடவும்.
மிக்ஸி ஜாரில் வெங்காயம், தக்காளி சேர்த்து அரைத்து அதனையும் குக்கரில் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பாஸ்தாவை சேர்த்து கொள்ளவும்.
ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சிறிதளவு சீஸ் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி ஒரு விசில் விட்டு இறக்கினால் சுவையான எக் சீஸ் பாஸ்தா தயார்.






