- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
முட்டை பொடிமாஸ் தனியா செஞ்சி இருப்பீங்க ஒரு சிலர் சிக்கன் பொடிமாஸ் கூட செஞ்சு இருப்பீங்க ஆனா முட்டையையும் சிக்கனையும் சேர்த்து இந்த மாதிரி முட்டை சிக்கன் பொடிமாஸ் ஒரு தடவை செஞ்சு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும். சுட சுட சாதம் போட்டு அதுல இந்த ரெசிபியை போட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா அடிக்கடி செய்வீங்க. இதுல குடைமிளகாய் பெரிய வெங்காயம் நல்லா வதக்கி சேர்த்து செய்றதால அவ்வளவு ருசியா இருக்கும். உங்களுக்கு என்ன குடைமிளகாய் என்ன கலர்ல பிடிக்குமோ அதை சேர்த்துக் கொள்ளலாம்.
ரொம்ப ரொம்ப டேஸ்ட்டாவே இருக்கும். இதுல நம்ம பச்சை நிற குடைமிளகாய் சேர்க்க போறோம் உங்களுக்கு என்ன குடைமிளகாய் பிடிக்குமோ சேர்த்துக்கோங்க. சுட சுட ரசம் சாதத்துக்கு இதை சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட அவ்ளோ ருசியாக இருக்கும். மட்டன் குழம்பு வச்சு சாதத்தில் போட்டு சாப்பிடும்போது கூட இதை சைடு டிஷ்ஷா பக்கத்துல வச்சு சாப்பிட்டா அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை ரொம்ப ரொம்ப ஈசியாவே செய்யலாம். இதுக்கு கால் கிலோ சிக்கன் இருந்தாலே போதும் 4 பேர் சாப்பிடலாம்.
சாம்பார் சாதத்துக்கும் கூட இது சூப்பரா இருக்கும். சப்பாத்தி இட்லி தோசைக்கு கூட இதை சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு இது ஒரு தடவை செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க பெரியவங்களும் கூட அவ்ளோ விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் இதனை செய்து கொடுங்கள். இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான முட்டை சிக்கன் பொடிமாஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சிக்கன் தொக்கு ஊறுகாய் இந்த மாதிரி செஞ்சு பாருங்க பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும்!!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய பெரிய வெங்காயம் நறுக்கிய குடை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
பிறகு முட்டையை உடைத்து சேர்த்து மிளகாய் தூள் கரம் மசாலா, மிளகுத்தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.
பொடியாக நறுக்கிய சிக்கனை சேர்த்து அனைத்தும் நன்றாக வேகும் வரை எண்ணெயிலேயே கிளறி விடவும்.
பிறகு கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான முட்டை சிக்கன் பொடிமாஸ் தயார்.






