Home அசைவம் முட்டை சாப்ஸ் ஒரு தடவ இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

முட்டை சாப்ஸ் ஒரு தடவ இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா என்று எதுவுமே சேர்க்காமல் ரொம்ப சிம்புலா காரத்துக்கு மிளகு மட்டும் சேர்த்து செய்கிற இந்த முட்டை சாப்ஸை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு நாள் ட்ரை பண்ணி பாருங்க. இந்த முட்டை சாப்ஸ்ச நம்ம வெரைட்டி சாதமான தயிர் சாதம் தக்காளி சாதம் புளி சாதம் லெமன் சாதம் புலாவ் அப்படின்னு எல்லாத்துக்குமே சைட் டிஸ்ஸா வச்சு சாப்பிடலாம் ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். வெரைட்டி ரைஸ் கூட வச்சு சாப்பிட ஒரு சூப்பரான காமினேஷன் இருக்கும். இந்த முட்டை சாப்ஸ் செய்றதுக்கு நமக்கு ரொம்ப ரொம்ப குறைவான நேரங்களே போதுமானது.

-விளம்பரம்-

மிக்ஸி ஜார்ல ஒரு மசாலா அரைச்சு அதை மட்டும் நல்லா எண்ணெயில் போட்டு வதக்கி முட்டையை சேர்த்துடா ரொம்ப ரொம்ப சூப்பரான முட்டை சாப்ஸ் ரெடி ஆகிவிடும். இதுக்கு நம்ம ரொம்ப நேரம் எடுத்துக்க தேவையில்லை. உங்க குழந்தைகளோட டிபன் பாக்ஸ்க்கு நீங்க என்ன முட்டை சாப்ஸ் ரெடி பண்ணி கொடுத்தீங்கன்னா ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிட வருவாங்க. இதுல நிறைய காரம் இல்லாததால குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான அருமையான முட்டை சாப்ஸ் சிம்பிளா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

முட்டை சாப்ஸ் | Egg Chops Recipe In Tamil

மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா என்று எதுவுமே சேர்க்காமல் ரொம்ப சிம்புலா காரத்துக்கு மிளகு மட்டும் சேர்த்து செய்கிற இந்த முட்டை சாப்ஸை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு நாள் ட்ரை பண்ணி பாருங்க. இந்த முட்டை சாப்ஸ்ச நம்ம வெரைட்டி சாதமான தயிர் சாதம் தக்காளி சாதம் புளி சாதம் லெமன் சாதம் புலாவ் அப்படின்னு எல்லாத்துக்குமே சைட் டிஸ்ஸா வச்சு சாப்பிடலாம் ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். வெரைட்டி ரைஸ் கூட வச்சு சாப்பிட ஒரு சூப்பரான காமினேஷன் இருக்கும். இந்த முட்டை சாப்ஸ் செய்றதுக்கு நமக்கு ரொம்ப ரொம்ப குறைவான நேரங்களே போதுமானது. உங்க குழந்தைகளோட டிபன் பாக்ஸ்க்கு நீங்க என்ன முட்டை சாப்ஸ் ரெடி பண்ணி கொடுத்தீங்கன்னா ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிட வருவாங்க. இதுல நிறைய காரம் இல்லாததால குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: dinner, LUNCH, Side Dish
Cuisine: Indian
Keyword: Egg Chops
Yield: 4 People
Calories: 139kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 4 பல் பூண்டு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 1 துண்டு இஞ்சி
  • 4 முட்டை
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு                              தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம் தக்காளி கருவேப்பிலை பூண்டு இஞ்சி மிளகு அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • முட்டையை வேகவைத்து இரண்டு துண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை 10 நிமிடத்திற்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  • மசாலா நன்றாக வதங்கியவுடன் அதில் முட்டையை சேர்த்து சிறிதளவு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான முட்டை சாப்ஸ் தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 139kcal | Carbohydrates: 6.7g | Protein: 16.4g | Fat: 4.57g | Sodium: 91mg | Potassium: 138mg | Fiber: 8.7g | Vitamin C: 184mg | Calcium: 24mg | Iron: 7.2mg

இதனையும் படியுங்கள் : பிரேக் பாஸ்ட்க்கு இந்த பிரட் முட்டை பிரட்டல் செய்து சாப்பிட்டு பாருங்க!