முட்டையில பக்கோடா வா அப்படின்னு ஆச்சரியமா பாக்குறீங்களா. முட்டையில பக்கோடா செஞ்சி சாப்பிட்டா ஒரு டிஃபரண்டான சுவையில் இருக்கும். நம்ம வெங்காயத்துல பக்கோடா செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா முட்டையில பக்கோடா செஞ்சு இதுவரைக்கும் சாப்பிட்டு இருக்க மாட்டோம். ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி இந்த முட்டை பக்கோடா உங்க வீட்ல செய்வீங்க. டேஸ்ட் ரொம்பவே அற்புதமான இருக்கும். சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே பிடிக்கும்.
வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கு டீ காபியோட இல்ல முட்டை பக்கோடாவை ஸ்னாக்ஸா குடுங்க கண்டிப்பா சாப்பிட்டு உங்களை பாராட்டுவாங்க. வீட்ல இருக்குற குழந்தைகளும் ஏதாவது டிஃபரண்டா வேணும்னு கேட்டாங்கன்னா அவங்களுக்கும் இந்த முட்டை பக்கோடாவை செஞ்சு கொடுத்து அசத்துங்க முட்டை பக்கோடா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இது வாங்க இந்த சுவையான கிரிஸ்பியான முட்டை பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
முட்டை பக்கோடா | Egg Pakora Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 4 முட்டை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
- 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு
செய்முறை
- முட்டையை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதில் உள்ள மஞ்சள் கருவை தனியாக எடுத்து வைத்து விட்ட வெள்ளையை மட்டும் துருவி எடுத்துக் கொள்ளவும்.
- அதனுடன் அரிசி மாவு சோள மாவு உப்பு இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து லேசாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து சேர்த்து பொறித்து எடுத்தால் சுவையான முட்டை பக்கோடா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : முட்டை சுக்கா இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!