- Prep
- 5 min
- Cook
- 5 min
- Total
- 11 min
- Serves
- 1
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
மதியம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சைடிஷ் இது போன்று முட்டை பொரியல் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். அதுமட்டும் அல்லாமல் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
எப்படி இந்த முட்டை பொரியல் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients
Method
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். சோம்பை பொடிசெய்துகொள்ளவும். மற்ற அனைத்து பொருட்களும் தயாராக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
வெங்காயத்தை வதக்கியதும் நறுக்கின தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் பிரட்டவும். மிளகாய் தூள் வாசனை போகும் வரை பிரட்டவும்.
பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி 3 நிமிடம் நன்கு கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
3 நிமிடம் கழித்து முட்டை ஊதிர்ந்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.






