- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- dinner, LUNCH
சிக்கன் சால்னா, மட்டன் சால்னா, எலும்பு சால்னா அப்படின்னு எல்லாமே கடைல வாங்கி ட்ரை பண்ணி பார்த்து இருப்பீங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம மட்டன் சிக்கன் வாங்க முடியலன்னா முட்டை வைத்து செய்யக்கூடிய ஒரு சூப்பரான முட்டை சால்னா ரெசிபி பார்க்க போறோம். இந்த முட்டை சால்னா ரெசிபி இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, குஸ்கா, பிரியாணி எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப சூப்பரான சைடிஷ் ஆக இருக்கும். பெரும்பாலும் சால்னா கடையில தான் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க வீட்டிலேயே இதே முறையில் செய்து பாருங்கள் ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும்.
இதுல முட்டைக்கு பதிலா சிக்கன், மட்டன் எது வேணும்னாலும் சேர்த்துக் கொள்ளலாம். ஒரே செய்முறை தான். ஆனால் உங்களுக்கு என்ன தேவையோ அதை சேர்த்து செய்து கொள்ளலாம். இந்த டேஸ்டான ருசியான சால்னா ரெசிபி கண்டிப்பாக வீட்ல இருக்குற எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அப்படியே கடையில கிடைக்கிற மாதிரியான ஒரு சால்னாவை வீட்டிலேயே செய்ய முடியும். இந்த சுவையான ரெசிபிக்கு வீட்டிலேயே பரோட்டா கூட செய்து சாப்பிடலாம்.
இந்த சூப்பரான சால்னா ரெசிபியை கண்டிப்பாக வீட்டில் ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. இந்த சால்னாவை நம்ம குக்கர்லையே செய்யலாம். இதுக்கு முட்டையை உடைத்து ஊற்றி சேர்க்க வேண்டும் வேகவைத்து சேர்க்கக்கூடாது. மல்லி இலைகள் புதினா இலைகள் எல்லாம் சேர்த்து இறக்கும் போது நல்ல வாசனையா ரொம்ப ருசியாக இருக்கும். இப்ப வாங்க இந்த முட்டை சால்னா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மசாலா முட்டை பணியாரம் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க சட்டுனு காலியாகிவிடும்!!
Ingredients
Method
ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து ஒரு டீஸ்பூன் சோம்பு, பட்டை கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லி தூள் சிக்கன் மசாலா கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து மசிய வதக்கவும்.
மிக்ஸி ஜாரில் தேங்காய் பச்சை மிளகாய், மிளகு ஒரு டீஸ்பூன் சோம்பு, முந்திரி பருப்பு பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து அந்த விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி மிதமான தீயில் மூன்று விசில் விட்டு இறக்கி கொத்தமல்லி இலைகள் புதினா இலைகள் சேர்த்து பரிமாறினால் சுவையான முட்டை சால்னா தயார்.






