- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening
காரப்பணியாரம், குழி பணியாரம், கருப்பட்டி பணியாரம், இனிப்பு பணியாரம், நெய் பணியாரம் அப்படின்னு நிறைய பணியாரம் ரெசிபி சாப்பிட்டு இருப்பீங்க. அந்த வகையில் இன்னைக்கு நம்ம கொஞ்சம் வித்தியாசமா மசாலா முட்டை பணியாரம் செய்ய போறோம். இந்த மசாலா முட்டை பணியாரத்துக்கு மாவு தேவையில்லை. முட்டையும் அது கூட ஒரு மசாலா விழுதும் இருந்தா போதும் ஒரு சுவையான மசாலா முட்டை பணியாரம் செஞ்சுடலாம். நிறைய பேரு முட்டை பணியாரம் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க.
அந்த முட்டை பணியாரம் ரொம்பவே சிம்பிளா வெங்காயம் பச்சை மிளகாய் மட்டும் சேர்த்து செஞ்சிருப்பீங்க. ஆனா இந்த மசாலா முட்டை பணியாரத்துல ஒரு மசாலா அரைச்சு சேர்க்கப்போறோம். அதோட டேஸ்ட் ரொம்பவே வித்தியாசமா இருக்கும் தேங்காய் துண்டுகள் பொட்டுக்கடலை காய்ந்த மிளகாய் பூண்டு இஞ்சி எல்லாமே சேர்த்து அரைச்சு செய்யும் போது ரொம்ப ரொம்ப வாசனையாக டேஸ்டாக இருக்கும்.
ஸ்கூலுக்கு போயிட்டு வருகிற குழந்தைகளுக்கு எப்பவுமே ஒரே மாதிரியா பிரட் ஆம்லெட், பிரட் சாண்ட்விச் இந்த மாதிரி ரெசிப்பிஸ் செஞ்சு கொடுக்காமல் இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா மசாலா முட்டை பணியாரம் செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க அதே நேரத்துல இது ஆரோக்கியமான ரெசிபியும் கூட. தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. ஆனா அப்படி சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான மசாலா முட்டை பணியாரம் செஞ்சு கொடுத்து பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான மசாலா முட்டை பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : முட்டை மலாய் மசாலா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும் அதில் பெரிய வெங்காயம் கருவேப்பிலை உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துண்டுகள் பொட்டுக்கடலை காய்ந்த மிளகாய் பூண்டு இஞ்சி சீரகம் மிளகு அனைத்தும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அதனை முட்டையுடன் சேர்த்து கலந்து கொத்தமல்லி இலைகள் தூவி நன்றாக கலந்து கொள்ளவும்.
பணியார கல்லில் எண்ணெய் சேர்த்து கலந்து வைத்துள்ள முட்டையை பணியார கல்லில் ஊற்றி இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்தால் மசாலா முட்டை பணியாரம் தயார்.






