- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner
பரோட்டா தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு உணவு வகை. இவை எந்த அளவுக்கு பிரபலம் என்றால் பரோட்டாவிற்கு என ஒரு தனி உணவுப் பிரியர்கள் கூட்டமே உண்டு. பரோட்டா என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே சொல்லலாம். ஆலூ பரோட்டா, கொத்து பரோட்டா, மெலிதான வீச்சுப் பரோட்டா, எண்ணெயில் பொரித்த விருதுநகர் பரோட்டா, அளவில் பெரிய மலபார் பரோட்டா, சிலோன் பரோட்டா, சில்லி பரோட்டா, முட்டைப் பரோட்டா, காலிஃப்ளவர் பரோட்டா என்று பல விதமான பெயர்களில் பல்வேறு சுவைகளில் உள்ளன. பரோட்டா எல்லோருக்கும் பிடித்த உணவு என்றாலும் அதை செய்வது கடினம் என்று யாரும் வீட்டில் செய்து கொடுப்பதில்லை. ஆனால் பலருக்கும் தெரியாது இதை வீட்டிலேயும் மிக எளிதாக செய்து விடலாம் என்று. அந்த வகையில் இந்த பதிவில் வீட்டிலேயே எப்படி முட்டை வீச்சு பரோட்டா செய்யலாம் என்று பார்க்கலாம். நம்முடைய வீட்டிலேயே மிக மிக எளிமையான முறையில் இந்த பரோட்டாவை செய்து சுடச்சுட சாப்பிட்டு ருசிக்கலாம். இதற்கு சைட் டிஷ் ஆக சால்னா, சைவ குருமா, அசைவ குருமா, குழம்பு என்று உங்கள் விருப்பம் போல எதை வேண்டுமென்றாலும் பரிமாறிக் கொள்ளலாம். சாதாரணமாக பரோட்டா செய்வதை விட இந்த வீச்சு பரோட்டா செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி.
இதனையும் படியுங்கள் : சாப்பாத்தி பரோட்டா இட்லி தோசைக்கு ஏத்த சூப்பரான மிட்டா சால்னா இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!!!
Ingredients
Method
முதலில் மைதா மாவுடன் உப்பு, சர்க்கரை, பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவுடன் சிறிதளவு எண்ணெய் ஊற்றி 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
பின் பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி இதையும் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
பின் சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து நன்கு பெரிதாக விரித்துக் கொள்ளவும்.
பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பரோட்டாவை போட்டு முட்டையை உடைத்து பரோட்டா மேல் ஊற்றி நன்கு கலக்கி அதன் மேல் உப்பு, மிளகுத்தூள் தூவி நான்கு பக்கமும் மடித்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பொன்னிறமாக முறுகலாக சுட்டு எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான முட்டை வீச்சு பரோட்டா தயார். இதை இரண்டாக வெட்டி பரிமாறவும். இதை சிக்கன் கிரேவி அல்லது சைவ சால்னாவுடன் சேர்த்து சாப்பிட்ட மிகவும் சுவையாக இருக்கும்.






