Advertisement
சைவம்

சாப்பிட சாப்பிட திகட்டாத கர்நாடகா ஸ்டைல் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ஈசியாக இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

சைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வது ரொம்பவே சுலபம் தான்! மசாலா வகைகளை சரியான அளவுகளில் சேர்த்து திக்காக இதே மாதிரியான முறையில் கர்நாடகா ஸ்டைல் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ஒருமுறை செஞ்சி பாருங்க, சாப்பிட சாப்பிட உங்களுக்கு சாப்பிட்டுகிட்டே இருக்கணும்னு தோணும். ருசியான கர்நாடகா ஸ்டைல் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படி எளிமையாக செய்யலாம்.

நாம ஒவ்வொருத்தரோட வீட்லயும், எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ஒவ்வொரு மாதிரியாக வைப்போம். அந்த வரிசையில், ஒரு புதுவிதமான கர்நாடகா ஸ்டைல்  எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இங்கு செய்திருப்பது போல் சற்று கெட்டியாக செய்தால் பருப்பு சாதம், ரசம் சாதத்தோடு சாப்பிட சுவையாக இருக்கும். மசாலா அரைக்கும் போது சற்று அதிகமாக அரைத்து சேர்த்து கிரேவியாக இறக்கினால் மிக அருமையாக இருக்கும். சப்பாத்தியோடு கர்நாடகாவில் கிடைக்கும் ஜோவார் மாவில் சப்பாத்தி போல் செய்து அதற்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

Advertisement

காரசாரமான கர்நாடகா ஸ்டைல் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வைத்துவிட்டு, சுடச்சுட சாப்பாட்டில் போட்டு பிசைந்து சாப்பிட்டால், போதும். நாம் வடிக்கும் சாப்பாடு பத்தாது. . அந்த அளவிற்கு வீட்ல இருக்கிறவங்க நல்லா சாப்பிடுவாங்க. , இந்த கர்நாடகா ஸ்டைல் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படி வைப்பது பார்க்கலாமா?

எண்ணெய் கத்திரிக்காய் | Ennai Kathirikai Recipe In Tamil

Print Recipe
வீட்லயும், எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ஒவ்வொருமாதிரியாக வைப்போம். அந்த வரிசையில், ஒரு புதுவிதமான கர்நாடகா ஸ்டைல்  எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை எப்படி வைப்பது என்பதைபற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். காரசாரமான கர்நாடகா ஸ்டைல்எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வைத்துவிட்டு, சுடச்சுட சாப்பாட்டில் போட்டு பிசைந்துசாப்பிட்டால், போதும். நாம் வடிக்கும் சாப்பாடு பத்தாது. .
Advertisement
அந்த அளவிற்கு வீட்ல இருக்கிறவங்கநல்லா சாப்பிடுவாங்க. , இந்த கர்நாடகா ஸ்டைல் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படிவைப்பது பார்க்கலாமா?
Course Gravy, LUNCH
Cuisine karnataka
Keyword ennai kathirikai kulambu
Prep Time 5 minutes
Cook Time 9 minutes
Servings 4
Calories 351

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 6 குட்டி கத்திரிக்காய்
  • 10 சின்ன வெங்காயம்
  • புளி சுண்டைக்காய் அளவு

அரைக்க

  • 1 மேசைக்கரண்டி வேர்க்கடலை
  • 2 மேசைக்கரண்டி தேங்காய் துருவல்
  • 1 மேசைக்கரண்டி மிளகாய் தூள் காரத்திற்கேற்ப
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • உப்பு தேவையானஅளவு

தாளிக்க

  • 4 மேசைக்கரண்டி நல்லெண்ணெய்
  • 1/4 தேக்கரண்டி கடுகு
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை

Instructions

  • சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை அனைத்தையும் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • கத்திரிக்காயை காம்பை மட்டும் நீக்கி விட்டு, படத்தில் உள்ளது போல் நான்காக கீறி உப்பு சேர்த்த தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு வைக்கவும்.
  • அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் அரை மேசைக்கரண்டி வேர்க்கடலை மட்டும் தனியே எடுத்து வைத்து விட்டு மற்ற பொருட்களை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும். பின்னர் எடுத்து வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்து வைத்திருக்கும் மசாலாவை படத்தில் உள்ளது போல் கத்திரிக்காயினுள் நிரப்பவும். மீதமுள்ள மசாலாவை தனியே வைக்கவும்.
  • வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும்.
  • அதனுடன் ஸ்டஃப் செய்த கத்திரிக்காய் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் நன்றாக வதக்கி தீயைக்குறைத்து மூடி போட்டு 3 நிமிடம் வேக விடவும். இடையிடையே அடிப்பிடிக்காமல் கிளறி விடவும்.
  • மீதமுள்ள மசாலாவை சேர்த்து, கால் கப் தண்ணீரில் புளியைக்கரைத்து அதில் ஊற்றி கொதிக்க விடவும் கொதி வந்ததும் தீயைக் குறைத்து வேக விடவும்.
  • தண்ணீர் வற்றி காய் குழைய வேகும் வரை(ஆனால் கத்திரிக்காய் உடைந்து விடக்கூடாது) குறைந்த தீயில் கிளறி இறக்கவும்.
  • சுவையான எண்ணெய் கத்திரிக்காய் தயார்.
  • உப்பை மசாலா அரைக்கும் போதே சேர்த்து விட வேண்டும். நல்லெண்ணெய்க்கு பதிலாக சாதாரண சமையல் எண்ணெயிலும் செய்யலாம்.

Nutrition

Serving: 250g | Calories: 351kcal | Carbohydrates: 63.2g | Protein: 11.2g | Trans Fat: 4g | Calcium: 31mg | Iron: 2.8mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

18 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

3 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

13 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

13 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

14 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

15 மணி நேரங்கள் ago