பொதுவாக குடும்பம் என்று இருந்தால் அந்த குடும்பத்தில் அவ்வப்போது சிறு சண்டைகள், கோபங்கள், சச்சரவுகள் இருக்கும் போது தான் அது ஒரு முழு குடும்பமாக நம்மால் பார்க்க முடியும். இதற்கு இதுபோன்று சிறு சிறு சண்டைகள் சச்சரவுகள் வரும்போது அதெல்லாம் நமக்கு பெரியதாக தெரியாது. ஆனால் ஒரு சில குடும்பங்களில் மட்டும் எப்போதும் சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டே இருக்கும் ஒருவர் எதை பேசினாலும் அது மிகப்பெரிய சண்டையில் சென்று தான் முடியும் அதுவும் குறிப்பாக கணவன் மனைவி இவர்கள் சண்டை பெரிய சண்டை ஆக இருக்கும் இப்படி குடும்பத்தில் எப்போதும் சண்டையாக நடந்து கொண்டிருக்கும் உங்கள் குடும்பத்தில் நிம்மதி நிலவ என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த ஆன்மீக ரீதியாக நாம் காணலாம் வாருங்கள்.
முன்னார்கள் செய்ய வேண்டிய கடமை
இப்படி எப்பொழுதுமே உங்கள் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் சண்டே வந்து கொண்டே இருக்கிறது தொட்டதுக்கெல்லாம் பிரச்சனையை தான் வருகிறது என்றால் அதற்கு உங்களின் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்காமல் இருப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அதனால்தான் எப்போதும் நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டையும் தர்ப்பணத்தையும் தவறாமல் செய்ய வேண்டும் நாம் சரியான முறையில் செய்யாமல் தவறும் பட்சத்தில் இது போன்ற குடும்பத்தில் பல பிரச்சனைகள் நடந்து கொண்டே தான் இருக்கும்.
பரிகாரம்
இப்படி நம் முன்னோர்களுக்கு சரியான முறையில் நம் கடமைகளை நிறைவேற்றாமல் இருந்து வந்திருந்தால். இந்த பிரச்சனையை சரி செய்ய ஒரு சிறிய பரிகாரம் செய்ய வேண்டும் இந்த பரிகாரத்தை நீங்கள் வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு வெள்ளை நிற தாளை எடுத்துக்கொண்டு அதில் உங்கள் வீட்டில் வாழ்ந்து மறைந்த உங்கள் முன்னோர்களின் பெயர்களை எழுதிக் கொள்ளுங்கள். அதன் பின் ஒரு வெள்ளை துணியில், நான்கு வெற்றிலை, இரண்டு கொட்டை பாக்கு, ஒரு கைப்பிடி பச்சரிசி சிறிது மஞ்சள் கலந்தது, ஒரு ரூபாய் நாணயம் இரண்டு விரலி மஞ்சள், இவை எல்லாம் வைத்த பிறகு நீங்கள் எழுதி வைத்து அந்த வெள்ளைத் தாளையும் சேர்த்து வெள்ளை துணியை ஒரு முடிச்சாக முடிந்து கொள்ளுங்கள்.
குலதெய்வத்தை வேண்டி
இவ்வாறு முடிச்சு நீங்கள் தயார் செய்ததும் வெள்ளிக்கிழமை நீங்கள் வீட்டில் எப்போதும் போல் பூஜை செய்தீர்கள் அல்லவா அதே போல் பூஜை செய்து உங்கள் குலதெய்வத்தையும் உங்கள் முன்னோர்களையும் மனதார நினைத்து உங்கள் குடும்பத்தில் அடிக்கடி நடந்து கொண்டிருக்கும் சண்டை, சச்சரவுகள் தீர வேண்டும் என்று அவர்களிடம் மனம் உருகி வேண்டி கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் வைத்திருக்கும் முடிச்சுக்கு நம் கற்பூரத்தை ஆராதனை, தீப ஆராதனை, சாம்பிராணி தூபம் எல்லாம் போட்டு உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.
முன்னைார்கள் அருள் கிடைக்கும்
நீங்கள் எப்போதும் வெள்ளிக்கிழமை செய்யும் பூஜையோடு குலதெய்வத்தையும் மனதார வேண்டிக் கொண்டு, உங்கள் முன்னோர்களையும் மனதில் நினைத்து உங்கள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று அவர்களிடம் வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த முடிச்சுக்கு கற்பூர தீபாராதனை காட்டி வழிபட்டு உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள். எப்படி அந்த முடிச்சுக்கு கற்பூர ஆராதனை தேவாரதனை போட்டு நாம் பூஜை செய்யும் போது முன்னோர்கள் நம் வீட்டில் இருக்கும் சண்டை சச்சரவுகள் போன்ற பிரச்சனைகளை தீர்த்து நமக்கு அருள் புரிவார்கள் நம்பிக்கையுடன் செய்து பாருங்க நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்