இந்த ராசிக்காரர்கள் தான் குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிக்காரர்களாம்!! இதில் உங்கள் ராசியும் உள்ளதா?

- Advertisement -

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான் இவர் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார் குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி குரு தனுசு மற்றும் மீன ராசிகளை ஆளும் கிரகமாகக் கூறப்படுகிறது. குரு ஒரு வருட இடைவெளியில் தனது ராசியை மாற்றுகிறார். இதன் காரணமாக கஜகேசரி மற்றும் ஹம்ஸ யோகம் போன்ற சுப யோகங்களும் உருவாகின்றன. ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிகள் அவருக்கு பிடித்த ராசிகளாக உள்ளன. யார் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் குரு பகவானுக்கு பிடித்த ராசிக்காரர்களாக உள்ளனர். தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு குரு அருளால் வெற்றிகரமான தொழில் வாழ்க்கை கிடைக்கிறது. இந்த ராசிக்காரர்களுடன் வியாபாரம் செய்வது பெரும்பாலான சூழ்நிலைகளில் நன்மை பயக்கும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்க கூடும்.

- Advertisement -

மீனம்

குரு பகவானுக்கு மீன ராசிக்காரர்களையும் மிகவும் பிடிக்கும். குரு பகவானின் சிறப்பு ஆசிகள் இவர்கள் மீது எப்போதும் இருக்கும். இலக்கை நோக்கி கடின உழைப்புடன் முன்னேறும் நபர்கள் இவர்கள். நல்ல பொருள் மற்றும் இன்பத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி நிலைமையில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மேஷம்

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். அனுமன் அவர்களுக்கு சிறப்பு ஆசிகளை வழங்குகிறார். ஹனுமான் சிவபெருமானின் அவதாரமாகக் கருதப்படுகிறார். சிவபெருமானுக்குப் பிடித்த ராசிகளில் முதல் ராசி மேஷம். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.

கடகம்

கடக ராசியின் அதிபதி சந்திரன், இதை சிவபெருமான் தலையில் அணிந்துள்ளார். ஆகையால், கடக ராசிக்காரர்களும் சிவபெருமானுக்கு மிகவும் பிரியமானவர்கள். குரு பகவானின் அருளும் இவர்களுக்கு உள்ளது. குரு அருளால் இவர்கள் வாழ்வில் அனைத்து வித வெற்றிகளையும் பெறுகிறார்கள். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.

-விளம்பரம்-

துலாம்

துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். சிவபெருமானுக்குப் பிடித்த ராசிகளில் துலாம் ராசியும் ஒன்று. இதன் காரணமாக குரு பகவானுக்கும் இவர்கள் பிடித்த ராசியாக இருக்கிறார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி காண்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் மகத்தான வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : பெயர்ச்சியாகும் செவ்வாயால் இனி இந்த ராசிகளுக்கு ராஜயோகம் தான்!!