மேஷம்

இந்த வாரம் புது நண்பர்கள் கிடைத்து மனதில் உற்சாகம் ஏற்படும். குடும்ப பொருளாதார நிலை மேம்படுவதால் மன நிம்மதி ஏற்படும். இல்லத்துணையின் சொந்தங்களை அனுசரித்து செல்வது நல்லது. தடைபட்ட வேலை நடக்கும். வருமானம் திருப்தி தரும். மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும் நாள். தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ஒருசிலர் புதிய தொழில் தொடங்குவீர். இழுபறியான வழக்குசாதகமாகும்.
ரிஷபம்

நினைத்த வேலை நடக்கும் வாரம் இது. பரபரப்பாக செயல்படுவீர். வருமானம் உயரும். வேலைக்கான முயற்சி வெற்றியாகும் உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். சிக்கல்கள் அகன்று மனதில் நம்பிக்கை மனதில் உருவாகும். குடும்ப பொருளாதாரம் மேம்படும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். ஆசைபட்ட இடத்தை வாங்குவீர். அரசு வழியில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். எதிர்பார்த்த பணம்வரும்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் கவனமாக செயல்பட வேண்டிய வாரமிது. பண விவகாரங்களில் அதிகபட்ச கவனம் தேவை. அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். உங்கள் முயற்சி வெற்றியாகும். இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். தள்ளிப்போன திருமணம் ஏற்பாடுகள் கைகூடி வரும். பெரியோரின் ஆதரவு அதிகரிக்கும். தெய்வ அருள் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். விரோதிகள் வீண் தொல்லைக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள்.
கடகம்

இந்த வாரம் திட்டமிட்ட வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். உங்களை எதிர்பார்த்து வருபவர்களுக்கு உதவி செய்வீர். இந்த வாரம் வேலைகளிலும் ஏதேனும் ஒரு பிரச்னை உருவெடுத்துக்கொண்டே இருக்கும். அதனால் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும். சகோதரனின் உடல்நிலை பாதிக்கப்படலாம். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கடன் கேட்ட தொகை கைக்கு வரும். வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவு செய்வீர்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் நிதானமாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டிய வாரம். பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. புதிய முதலீடுகளில் யோசித்து செயல்படுவதும் நண்பர்களையும், வாழ்க்கைத் துணையையும் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும். பொன் பொருள் சேரும். செயல்களில் இருந்த தடை விலகும். ஒருசிலருக்கு வெளியூர் செல்ல வேண்டிய சூழல் உருவாகும். மறைமுக எதிர்ப்புகளை முறியடிக்க வேண்டிய நிலை ஏற்படும். தொழில் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வீர்கள்.
கன்னி

இந்த வாரம் நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும். உடல்நிலையும் மன நிலையும் சீராகும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். நெருக்கடி நீங்கும். நேற்றைய பிரச்னை முடியும். வழக்கு சாதகமாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். வியாபாரத் தடை விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரம் எதிர்பாராத லாபத்தை கொடுக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வீர்கள்.
துலாம்

இந்த வாரம் பண வரவில் இருந்த தடை விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். நெருக்கடி விலகும். தடைபட்ட வேலை நடக்கும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். செல்வாக்கு உயரும். தொழிலில் இருந்த போட்டி விலகும். உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். எடுக்கும் வேலை வெற்றியாகும். வழக்கு சாதகமாகும். பணத்தட்டுப்பாடு காரணமாக தடுமாற்றம் அடைவீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கு மருத்துவச் செலவு செய்ய வேண்டி வரும். எதிர்ப்பைக் காட்டியவர்கள் உரிய நேரத்தில் உதவி செய்வார்கள்.
விருச்சிகம்

இந்த வாரம் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்ததுபோல் உங்கள் வாழ்க்கை மாறும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொத்து, வாகனம் என்ற கனவு நனவாகும். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த பணம் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். உறவுகளைப் பேணுவதில் அக்கறை காட்டுங்கள். தேவையில்லாத விரோதங்கள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள்.
தனுசு

இந்த வாரம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எடுக்கும் முயற்சி சாதகமாகும். வேலைகளில் இருந்த தடை விலகும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களுக்காக தேவையில்லாமல் செலவு செய்யாதீர்கள். அநாவசிய கோபத்தின் மூலம் விரோதம் அதிகரிக்கும். மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள். மனைவி மக்களின் ஆதரவு மனதிற்கு நிம்மதியைத் தரும். பெரிய மனிதர்கள் சந்திப்பு உற்சாகத்தைத் தரும்.
மகரம்

உங்கள் செல்வாக்கு உயரும் வாரம் இது. விரயச்செலவு கட்டுப்படும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். திருமண வயதினருக்கு வரன் வரும். பெண்களால் பணம் வரவு உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் மகிழ்ச்சியான மனநிலைக்கு மாறுவீர்கள். புதிய வீடு மாறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும்.
கும்பம்

இந்த வாரம் உங்கள் வேலை, வியாபாரம், தொழிலில் அக்கறை தேவை. புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். திங்கள் கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். துக்ககரமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். நெருங்கிய நண்பர்கள் உதவி செய்வார்கள். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை.
மீனம்

பல வழியிலும் செலவு தோன்றும். இந்த வாரத்தில் புதிய முயற்சிகளும், முதலீடும் வேண்டாம். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவி உறவு மேம்படும். எதிர்பார்ப்புகளும் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். ஒரு சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணத்திற்கு வாய்ப்பு அமையும். உங்கள் வேலைகளில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளியூர்ப் பயணங்களால் பணம் வரவு ஏற்படும்.தெய்வ வழிபாட்டின் மூலம் நன்மை உண்டாகும்.
இதனையும் படியுங்கள் : 12 ராசிக்காரர் செய்ய வேண்டிய பரிகாரம்


