- Prep
- 10 min
- Cook
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
பிஷ் நிர்வாணா கேக்குறதுக்கு கொஞ்சம் வித்தியாசமான ரெசிபியா இருக்கும். ஆனா நீங்க குக் வித் கோமாளி சீசன் 2 பார்த்திருந்தீங்கன்னா கண்டிப்பா இந்த ரெசிபி உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆமாங்க குக் வித் கோமாளி ஸ்பெஷல் விசித்ரா செஞ்சதுதான் இந்த பிஷ் நிர்வாணா. இது சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும் மீன நல்லா பொருச்சு எடுத்து அதுல தேங்காய் பால் ஊற்றி ஊற வைத்து வேக வைத்து எடுத்து சாப்பிடும்போது மீன் நல்லா ஜூஸியா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்.
மீன் வச்சு மீன் குழம்பு மீன் வறுவல் மீன் பொரிச்சது மீன் புட்டு அப்படினா நிறைய செஞ்சு இருப்போம் ஆனால் ஒரே ஒரு தடவை கேரளா ஸ்பெஷலான இந்த ரெசிபியை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க உங்க வீட்ல இருக்கிற குழந்தைகள் வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் மீன் சாப்பிடுவதற்கு கிரிஸ்ப்பியாவும் ஜூஸியாவும் அவ்வளவு டேஸ்டா இருக்கும். குழந்தைகளுக்கு எப்பவுமே நம்ம வித்தியாசமா செஞ்சு கொடுத்தா தான் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க அந்த வகையில இந்த வித்தியாசமான கேரளா ஸ்பெஷல் ரெசிப்பிய கண்டிப்பா ஒரு நாள் உங்க குழந்தைக்கு செஞ்சு கொடுங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்த அசத்துங்க இப்ப வாங்க இந்த சுவையான பிஷ் நிர்வாணாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வார இறுதியில் ஆந்திரா ஸ்டைலில் இந்த மீன் குழம்பை செய்து பாருங்கள் இனி இப்படித்தான் மீன் குழம்பு செய்வீர்கள்!!
Ingredients
Method
வஞ்சிரம் மீன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு சிறிய தட்டில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் அரை டீஸ்பூன் அளவு மிளகு தூள் உப்பு இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
கலந்து வைத்துள்ள மசாலாவை மீண்டும் மேல் தடவி அரைமணி நேரம் ஊற வைத்து தோசை சட்டியில் எண்ணெய் ஊற்றி சேலோ ப்ரை செய்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான கடாயில் வாழை இலையை விரித்து அதன் தேங்காய் எண்ணெயை ஊற்றி தேங்காய் எண்ணெய் காய்ந்ததும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு பிரை செய்து வைத்துள்ள மீனை சேர்த்து அதன் மேல் தேங்காய் பால் அரை டீஸ்பூன் மிளகுத்தூள் உப்பு தட்டிய இஞ்சி, கீரிய பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்த்த இறுதியாக தேங்காய் எண்ணெய் ஊற்றி ஐந்து நிமிடத்திற்கு மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் சுவையான பிஷ் நிர்வாணா தயார்.






