- Advertisement -
நீங்கள் மீன் பிரியர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது சுவையான மீன் பொரியல் இது போன்று ஒரு தரம் செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். அதுமட்டும் அல்லாமல் எல்லோரும் விரும்பிய சாப்பிட கூடிய வகையில் இருக்கும்.
-விளம்பரம்-
எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
- Advertisement -
மீன் பொரியல் | Fish Poriyal Recipe In Tamil
நீங்கள் மீன் பிரியர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது சுவையான மீன் பொரியல் இது போன்று ஒரு தரம் செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். அதுமட்டும் அல்லாமல் எல்லோரும் விரும்பிய சாப்பிட கூடிய வகையில் இருக்கும்.எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- 1 பெரிய மீன்
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- உப்பு தேவையான அளவு
- ½ டீஸ்பூன் சோம்பு தூள்
- ¼ கப் எண்ணெய்
செய்முறை
- முதலில் மீனை சுத்தம் செய்து கழுவி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீனை போட்டு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், உப்பு, போட்டு பிரட்டி 10 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவும்.
- அடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்த மீனை போடவும்.
- தீயை மிதமாக வைத்து 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வேக விடவும்.
- 3 நிமிடம் கழித்து வெந்ததும் எடுத்து விடவும். சுவையான மீன் பொரியல் தயார்.