
கடன் பிரச்சனை என்பது தற்போது மிகவும் சர்வ சாதாரணம் ஆகி விட்டது. கடன் வாங்குவது தவறு என்றாலும் சூழ்நிலை காரணமாக கடன் வாங்கி விட்டு, பிறகு அதை திருப்பி அடைக்க முடியாமல், எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என புலம்புகிறவர்கள் தான் அதிகம். எனவே கடன் வாங்குவது சகஜம். அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வாழ்க்கையை செவ்வனே நடத்த வேண்டும் என்பதே பெரியோர்களின் கட்டளை. எனினும் ஏதேதோ காரணங்களுக்காக கடன் வாங்கத்தான் வேண்டியுள்ளது. அது காலப்போக்கில் பெரிதாகி தீரவே தீராத பெரும் சுமையாகியும் விடுகிறது. ஒரு பக்கம் கடன் வாங்கி மறுபக்கம் கடனை அடைத்து, இப்படி எல்லா பக்கமும் கடன் பெருகிக் கொண்டேப் போகிறது என்று கவலைப்படுகிறீர்களா! இதோ அதற்கும் பரிகாரத்தை சொல்லி உங்களை வழிநடத்துகிறது ஆன்மிகம்.
கடன் தீர்க்கும் ஐந்து ரூபாய் பரிகாரம்
கடன் அடைய வேண்டுமென்றால் அதற்கு முதலில் பண வரவு அதிகரிக்க வேண்டும். எவ்வளவு பெரிய வருமானம் வந்தாலும் அந்த வருமானம் கையில் தங்கமால் மேலும் மேலும் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அதாவது ஆடம்பர செலவுகள் செய்யவில்லை என்றாலும் அவரகளுக்கு கையில் பணம் தங்குவது இல்லை. பண வரவு அதிகரித்தால் கடன் அடைந்து விடுமா என்றால் அதுவும் முடியாது. ஏனென்று கேட்டால், சிலரிடம் வாங்கிய கடனை உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் அதைத் திருப்பிக் கொடுப்பதற்கான நேரம் காலம் அமையாது. இந்த பரிகாரத்தை செய்யும் போது உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். அப்படி வரும் பணம் உங்கள் கடனை அடைக்கப் பயன்படும்.
பரிகாரம் செய்யும் முறை
இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு கண்ணாடி டம்ளர் அல்லது கண்ணாடி கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் முதலில் கல் உப்பை போட வேண்டும். அதற்கு மேல் வெள்ளை சர்க்கரையை போட வேண்டும், பின் கடைசியாக பச்சரிசியை போட வேண்டும். அதன்பிறகு பூஜையறையில் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக மூன்று வெற்றிலை இரண்டு கொட்டை பாக்கை வைத்து அதற்கு மேல் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து கடன் அடைய வேண்டும், பணவரவு அதிகரிக்க வேண்டும் என மனதார வேண்ட வேண்டும். பின் அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை கண்ணாடி டம்ளரில் வெளியே தெரியாதவாறு புதைத்து வைத்து விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 26 வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும்.
26வது வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாருக்கு வேகவைத்த வெள்ளை மொச்சையை சர்க்கரை பாகில் கலந்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் போதும் புதிதாக அரிசி, உப்பை மாற்ற வேண்டும். அப்படி மாற்றும் போது உப்பையும், சர்க்கரையையும் கால் படாத இடத்தில் அல்லது ஓடுகின்ற தண்ணீரில் போட்டு விட வேண்டும். அதன்பிறகு 27வது வெள்ளிக்கிழமை நாம் சேர்த்த அனைத்து ஐந்து ரூபாய் நாணயத்தையும் மஞ்சள் நிற துணியில் கட்டி குல தெய்வ கோவில் உண்டியலில் போட்டு விட வேண்டும். பின் நம்மால் இயன்றதை குல தெய்வ கோவிலுக்குச் செய்ய வேண்டும். இவ்வாறு இந்த பரிகாரத்தை செய்து வேண்டினால் வீட்டில் இருக்கும் பண கஷ்டம் சீக்கிரம் முடிவுக்கு வந்து கடனை அடைக்க விடிவுகாலம் பிறக்கும்.
இதனையும் படியுங்கள் : ஒற்றுமையை அதிகரிக்கும் உப்பு மிளகு பரிகாரம்



