- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 2
- Cuisine
- Indian
- Course
- Breakfast
பிரட் அப்படின்னாலே குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பிரட் அல்வா, பிரட் ஆம்லெட், பிரட் பால்ஸ் அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செய்யலாம். ஆனா பிரெட் வச்சு ரொம்பவே ஆரோக்கியமான ஒரு ரெசிபி தான் இப்ப நம்ம பாக்க போறோம். இந்த ஸ்னாக்ஸ் செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி. குழந்தைகளுக்கு நீங்க சொல்லிக் கொடுத்து பக்கத்திலேயே இருந்த அவங்களையே கூட இதை செய்ய வைக்கலாம் அந்த அளவுக்கு ஒரு ஈஸியான ரெசிபி தான் இந்த கார்லிக் பிரட். இதுல நிறைய சீஸ் பட்டர் சேர்த்து செஞ்சா குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும் அதே நேரத்துல ரொம்ப டேஸ்டாவும் இருக்கும்.
காலைல குழந்தைங்க பிரேக்ஃபாஸ்ட்க்கு இந்த சூப்பரான கார்லிக் பிரிட்டர் செஞ்சு கொடுக்கலாம் அடம் பிடிக்காமல் ஸ்கூலுக்கு போவாங்க. அது மட்டும் இல்லாம ஈவினிங் ஸ்கூல் விட்டு வர உங்க பசங்களுக்கு அப்ப கூட இந்த கார்லிக் பிரட் செஞ்சு கொடுக்கலாம். குழந்தைங்க ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைங்க மட்டுமில்லாமல் வீட்ல இருக்க கூடிய எல்லாருமே இந்த ஸ்னாக்ஸை ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க இந்த கார்லிக் பிரட் ரெசிபிக்கு மைதா மாவு பிரட்டும் யூஸ் பண்ணலாம் அதே நேரத்தில் கோதுமை மாவு பிரட்டும் யூஸ் பண்ணலாம். இப்ப வாங்க இந்த சூப்பரான கார்லிக் பிரட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சுவையான பிரட் வெஜ் உப்புமா செய்வது எப்படி ?
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் பட்டர் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பூண்டை நன்றாக துருவி சேர்த்து கலந்து பிரட்டின் மேல் இரு பக்கமும் தடவிக் கொள்ளவும்.
அதனை தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து பிறகு தேவையான அளவு சீஸ் சேர்த்து நன்றாக ரோஸ்ட் செய்து எடுத்தால் சுவையான கார்லிக் பிரட் தயார்.






