- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
இஞ்சி தொக்கு என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடித்த உணவாக இருக்கிறது. இந்த இஞ்சி தொக்கை வைத்து எந்த உணவுக்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அந்த அளவுக்கு இதனுடைய ருசி இருக்கும். நாம் எப்பொழுதும் சாப்பிடும் உணவின் அளவை விட இஞ்சி பூண்டு தொக்கு இருந்தால் கொஞ்சம் அதிகமாக சாப்பிடுவோம். சிறிதும் நேரமில்லாமல் நகர்புறங்களில் பணி செய்து கொண்டிருக்கும் நண்பர்கள் ஒருமுறை இந்த தொக்கை இந்த முறையில் செய்து பாருங்கள்.
மிகவும் குறைந்த நேரத்தில் எளிதில் தயாராகும் இந்த தொக்கை, மூன்று மாதங்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். இனிப்பு, புளிப்பு, கசப்பு உள்ளிட்ட அறுசுவையும் இந்த தொக்கில் இருக்கிறது. இனி சட்னி, சாம்பார் என டிபனுக்கு புதிதாக சைடு டிஷ் செய்யத் தேவையே இல்லை. இந்த இஞ்சி மிளகாய் தொக்கு ரெசிபியை செய்து ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்தாலே போதும். சுடச்சுட இட்லி, தோசை அல்லது சப்பாத்திக்கு இன்ஸ்டன்ட்டாக தேவைப்படும் நேரத்தில் இதனை சைடு டிஷ்ஷாக உபயோகிக்கலாம். இந்த தொக்கும் அப்பளமும் இருந்தால் போதும். அதுவே பலருக்கும் விருந்து சாப்பிட்டது போல் குஷி ஆகிவிடுவார்கள். இந்த தொக்கு செய்வது எளிமையான விஷயம் என்றாலும் அதன் சுவை செய்யும் பக்குவத்தில் தான் உள்ளது.
நாம் உணவுகள் சாப்பிடும் போதே பொரியல் கூட்டு எதுவும் இல்லாத சமயத்தில் அந்த தொக்கை சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வோம். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் ஊறுகாய் இருப்பதை அரிதான ஒன்றாக மாறி வருகிறது. இந்த இஞ்சி மிளகாய் தொக்கு பசியின்மை, வயிறு மந்தம், வயிற்று கோளாறுகள் ஆகியவற்றிற்கு கைகண்ட மருந்து. அந்த வகையில் இன்று நாம் இஞ்சி மிளகாய் தொக்கு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : சூப்பரான மாங்காய் இனிப்பு தொக்கு இப்படி வீட்டிலயே செஞ்சு பாருங்க! மாம்பழ சீசன் வேறு வந்துவிட்டது..!
Ingredients
Method
முதலில் இஞ்சியை தோள் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி, காய்ந்த மிளகாய், புளி, உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் நாம் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் பச்சை வாசனை போக வதக்கவும்.
அதன்பிறகு எண்ணெய் பிரிந்து வந்ததும் வெல்லம் சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான இஞ்சி மிளகாய் தொக்கு தயார்.






