செவ்வாய்க்கிழமை என்றாலே நம் நினைவுக்கு வருவது துர்க்கை அம்மன் தான். செவ்வாய்க்கிழமை என்று துர்க்கை அம்மனையும் முருகரையும் வழிபாடு செய்வார்கள். தொடர்ந்து முருகரையும் துர்க்கை அம்மனையும் வழிபட்டு வந்தாலே வீட்டில் உள்ள அனைத்து பாதிப்புகளும் கடன் சுமைகளும் குறைந்து விடும் கெட்ட சக்தியால் எந்த பாதிப்பும் வராது. ராகு கேது தொல்லை ஜாதக கட்டத்தில் பிரச்சனை சுப காரியத்தடை போன்ற அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். தை மாதத்தில் செவ்வாய்க்கிழமை என்று வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் கெட்ட சக்திகளையும் விரட்டி அடிக்க துர்க்கை அம்மனை வீட்டிற்குள் வரவேற்க செய்ய வேண்டிய எளிய பரிகாரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

துர்க்கை அம்மன் வழிபாடு
செவ்வாய்க்கிழமை வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் வீட்டு வேலை எல்லாம் முடித்துவிட்டு காலை அல்லது மாலை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். துர்க்கை அம்மனின் படம் இருந்தால் அதனை எடுத்து அந்த படத்திற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்யலாம் மனநிறைய துர்க்கை அம்மனை போற்றி போற்றி துர்க்கை அம்மன் திருப்பாதங்களை பணிவோம் என்று சொல்லிக் கொண்டே இந்த பரிகாரத்தை துவங்க வேண்டும்.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு டம்ளர் நிறைய சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு செவ்வரளிப்பூ அனைத்தையும் போட்டு அம்மனின் திருவுருவப்படத்திற்கு முன்பாக வைத்துவிட்டு மனம் உருகி பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டில் இருக்கக்கூடிய கெட்ட சக்திகள் செய்வினை எதிர்மறையாற்றல் அனைத்தையும் வீட்டிலிருந்து வெளியேற்ற இந்த பரிகாரம் மிகவும் சக்தி வாய்ந்தது. வீட்டில் தெய்வ சக்தி மட்டுமே நிலைத்திருக்க இந்த பரிகாரத்தை செய்யலாம்.
தீர்த்தத்தை பயன்படுத்த வேண்டிய முறை
இந்த தீர்த்தத்தை வீட்டின் வாசற்படியில் இருந்து வீட்டிற்குள் தெரிவித்துக் கொண்டே வரவேண்டும் வீட்டின் மூளை முடுக்குகளில் எல்லாம் தெளிக்க வேண்டும் பூஜை அறையிலும் தெளிக்க வேண்டும் வெளியிலிருந்து உள்பக்கமாகத்தான் தெளித்துக் கொண்டே வர வேண்டும். ஓம் துர்க்கை அம்மனே காப்பாய்! ஓம் துர்க்கை அம்மனே காப்பாய்! என்று சொல்லிக் கொண்டே தீர்த்தத்தை தெளித்துவிட்டு மீதம் இருக்கக்கூடிய தண்ணீரை வீட்டை சுற்றி தெளிக்க வேண்டும். வீட்டிற்கு காம்பவுண்ட் சுவர் இருக்கிறது என்றால் அந்த இடத்திலும் தெளித்து விடலாம் வீட்டு மொட்டை மாடியில் தெளிக்கலாம் தொடர்ந்து 9 வாரம் செவ்வாய்க்கிழமை இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். வீட்டில் தங்கி இருக்கும் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் வீட்டை விட்டு வெளியேறும் துர்க்கையாம்பாள் உங்கள் வீட்டில் குடியேற மனதார இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : கடனை தீர்க்கும் கால பைரவரின் பரிகாரம்


