தங்க நகைகள் வாங்கும் போது மறந்து கூட இந்த நேரத்தில் வாங்காதீர்கள்! அந்த தங்கம் கையில் நிலைக்காது!

- Advertisement -

நமது முன்னோர்கள் நமக்கு ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார்கள் என்றால் அதன் பின் ஒரு ஆழமான ஆன்மிக காரணமோ அல்லது அறிவியல் காரணமோ கண்டிப்பான முறையில் இருக்கும். ஆனால் நாம் அதை உதாசீனப்படுத்தாமல் சரிவர செய்து வர வேண்டும். பலருக்கும் இன்றைய நாட்களில் நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு விஷயங்களின் பின்னால் இருக்கும் காரணங்களை கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதே போல் தான் அவர்கள் கூறியதை நாமும் சரிவர கடைபிடித்து வந்தாலே போதும் நம் வாழ்வை மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி நம் முன்னோர்கள் மகாலட்சுமியின் அம்சமாக விளங்கும் உப்பு மற்றும் தங்கத்தை எந்த நேரத்தில் வாங்க வேண்டும் கூறியிருக்கிறார்கள் அதைப்பற்றி நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

சூரிய வெளிச்சம்

பொதுவாக முன்பெல்லாம் மாலை நேரத்திற்கு பின்பு எந்தவித நல்ல காரியங்களையும் செய்ய மாட்டார்கள் பெரும்பாலானோர் அதற்கு அந்த காலத்தில் மின்விளக்குகள் இல்லாததனால் இரவில் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று நினைக்கலாம். ஆனால் நாம் முன்னோர்கள் சூரிய வெளிச்சத்தில் நாம் செய்யும் காரியங்கள் நமக்கு வெற்றியைத் தேடித் தரும் எனவும். இருட்ட பின்பு நாம் செய்யும் காரியங்கள் வெற்றி பெற கால தாமத்தை தரும் என நமக்கு கூறி இருக்கிறார்கள். அப்படித்தான் நாம் வாங்கும் தங்கமும் அப்படி நாம் தங்கம் வாங்கும் போது 6 மணிக்கு முன்பாக வாங்கி விட வேண்டும் அதேபோல் உப்பையும் மாலை 6 மணிக்கு மேல் வாங்க கூடாது.

- Advertisement -

விளக்கு ஏற்றி பின்பு

இன்றைய காலங்களில் பொருட்கள் வாங்குவதற்கு நேரமே இரவு நேரம் என்பது போல் ஆகிவிட்டது. அனைவரும் வீட்டில் விளக்கு ஏற்றிய பின்பும், வானம் இருண்ட பிறகு தான் கடைகளில் கூட்டமே கூடுகிறது. ஆனால் நம் முன்னோர்களும் எந்த பொருள்கள் வாங்கினாலும் மாலை 6 மணிக்கு முன்னதாகவே வாங்கி விட வேண்டும் என்று நமக்கு கூறியிருக்கிறார்கள். நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இதான் உண்மை நீங்களே சிந்தித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் இப்போது ஒரு தங்க நகை வாங்க செல்கிறீர்கள் என்றால் நேரம் காலம் பார்க்காமல் நீங்கள் வாங்கி விட்டு வந்தீர்கள் என்றால் நீங்கள் தங்கம் வாங்கிய நேரம் நல்ல நேரமாக இருந்தால் உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது.

இந்த நேரத்தில் வாங்காதீர்

ஆனால் நீங்கள் இப்படி தங்கம் வாங்கிய நேரம் ராகு காலம் எமகண்டம் நேரம் இப்படி நல்ல நேரமாக இல்லாத பொழுது. நீங்கள் வாங்கிய தங்க நகையை வீட்டிற்கு கொண்டுவந்தவுடன் நமது வீட்டில் பல பிரச்சனைகள் பல குழப்பங்கள் ஏன் நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கிய தங்க நகையை நம் வீட்டில் இருக்காது. ஏதாவது எதிர்பாராதவிதமான திடீர் செலவுகள் வந்து நாம் வாங்கிய தங்கத்தை நாமே அடகு வைக்க வேண்டிய சூழ்நிலை கூட வரலாம் அதனால் தங்கம் வாங்கப் போகும் போது நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்து தான் வாங்க போக வேண்டும்.

தோஷம் கழிய

இப்படி நீங்கள் தங்க நகை வாங்கும் போது அல்லது வீட்டிற்கு கல் உப்பு வாங்கும் போது அதனுடன் சேர்த்து மல்லிகை பூ அல்லது கண்ணாடி போன்ற பொருட்களை வாங்குவது உங்களுக்கும் உங்கள் வீட்டிற்கும் நல்ல பலன்களை மட்டும் தரக்கூடியது. அப்படி இல்லை என்றால் தங்கம வாங்கும்போது விரலி மஞ்சள் ஆவது சேர்த்து வாங்க வேண்டும் நீங்கள் இப்படி விரலி மஞ்சள் வாங்கும் போது நீங்கள் வாங்குகின்ற தங்கத்தின் மீது தோஷம் இருந்தால் தோஷம் கழிவதற்கு இந்த விரலை மஞ்சள் உபயோகமாக இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டிற்கு துணிமணி எடுப்பதாக இருந்தாலும் பொருட்கள் வாங்குவதாக இருந்தாலும் விளக்கு ஏற்றுவதற்கு முன்பாகவே போய் வாங்கி விட்டு வருவது மிகவும் நல்லது. நம் முன்னோர்கள் வழியிலேயே நாமும் செல்வோம்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here