உங்கள் தங்க நகைகள் மீண்டும் அடமானத்திற்கு செல்லாமல் இருக்க வேண்டுமா ? இந்த இரண்டு பொருள் இருந்தால் போதும்!

- Advertisement -

இன்றைய உலகத்தில் நாம் கஷ்டப்பட்டு பணத்தை கூட சேர்த்து விடலாம் போல ஆனால் சுலபமாக தங்க நகைகள் வாங்கிட முடியாது போல. அப்படியே நாம் கஷ்டப்பட்டு சிறிது சிறிதாக சேர்த்து வைத்த பணத்தில் நாம் நம் போட்டு கொள்வதற்காக அல்லது நம் வீட்டில் உள்ள குழந்தைகளின் திருமணத்திற்காகவோ கஷ்ப்பட்டு, லோல் பட்டு சிறிது சிறிதாக தங்க நகையே சேர்த்தாலும். நாம் ஆசைப்பட்டு வாங்கிய தங்க நகை நம் வீட்டில் நம்முடன் வைத்திருக்காத முடியாத அளவிற்கு பல சூழ்நிலைகள் உருவாகி விடும்.

-விளம்பரம்-

பெரும்பாலன நபர்கள் கஷ்டப்பட்டு தங்க நகை வாங்கி விட்டாலும் ஏதாவது ஒரு நாளில் வரும் இக்கட்டனான சூழ்நிலைகள் ஏற்ப்படும் போது அந்த தங்க நகைகளை அடமானத்திற்கு வைத்து விடுவார்கள். இருந்தாலும் அடமானத்தில் வைத்த நகையே மீட்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் சில நேரங்களில் அடகு வைத்த தங்க நகைகளை மீட்க முடியாமல் போய்விடுகிறது. அதனால் நாம் அடகு வைத்த தங்க நகை மீண்டும் மீட்டு அந்த நகையை திரும்ப அடகுக்கு செல்லாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

- Advertisement -

பரிகாரம்

முதலில் நீங்கள் வைத்திருக்கும் நகையே திரும்ப அடமானத்திற்கு செல்லாமல் இருப்பதற்காக நீங்கள் நான் சொல்லப்போகும் இந்த விஷயத்தை செய்ய வேண்டும் இதை நீங்கள் ஒரு பரிகாரமாக கூட எடுத்துக் கொள்ளலாம். அதற்காக நீங்கள் அடமானத்தில் இருக்கின்ற நகையை மீட்டு கொண்டு வந்தவுடன் அந்த நகையும் உடனடியாக உடம்பில் அணிந்து கொள்ளாமல் அல்லது பீரோவில் வைப்பதற்கு முன்பாக. முதலில் சுத்தமான தண்ணீர் வைத்து நன்கு கழுவிக் கொண்டு பின்னர் ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்றி அதில் ஒரு சிட்டிகை கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து கொள்ளுங்கள் அந்த தண்ணீரில் நாம் அடமானத்திலிருந்து திருப்பிக் கொண்டு வந்த தங்க நகைகளை சேர்த்து கொள்ளுங்கள்.

சிறிய பூஜை செய்ய வேண்டும்

அதன் பின்பு அந்த தங்க நகைகளை பூஜை அறைக்கு கொண்டு சென்று சிறியதாக ஒரு பூஜை மட்டும் செய்து விட்டால் போதும். நீங்கள் அப்படி அடமானத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வந்து நகையை மேல் சொன்னது போல் சுத்தம் செய்து எந்த நாளில் நீங்கள் நகையை கொண்டு வந்தாலும் அந்த நாளில் குரு ஒரை இருக்கும் நேரமாக பார்த்து இந்த பூஜைக்கான நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இந்த குரு ஒரை நேரம் எப்பொழுது வரும் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால். காலாண்டரின் பின் புறத்தில் இன்றைய நாளில் எந்த ஓரை எந்த நேரத்தில் இருக்கும் என்று எழுதப்பட்டிருக்கும். அதை பார்த்து தெரிந்து கொண்டு இந்த பூஜையை நீங்கள் செய்ய வேண்டும்.

மகாலட்சுமி தயாரை நினைத்து

அப்படி இந்த பூஜையை நீங்கள் செய்வதற்கு மகாலட்சுமி தாயாரின் திரு உருவ படத்திற்கு முன்பாக மஞ்சள் மற்றும் உப்பு கலந்த தண்ணீர் வைத்திருக்கும் பாத்திரத்தை வைத்து. அதனுடன் மகாலட்சுமி தாயாருக்கு இரண்டு நெய் தீபங்கள் ஏற்றிய பிறகு. தாயாரை மனதார நினைத்து. நாம் அடகுவில் இருந்து மீட்டுக் கொண்டு வந்து நகை திரும்பவும் அடகுக்கு செல்லாமல் நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நகை என்றென்றைக்கும் என்னிடமே இருக்க வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். அதன்பிறகு நீங்கள் வைத்திருக்கும் பாத்திரத்தில் இருந்து நகையை எடுத்து ஒரு சுத்தமான துணியை நன்கு துடைத்துக் கொண்டு உங்கள் பூஜை அறையில் இருக்கும் சாமி படங்கள் அல்லது வீட்டில் விக்ரகங்கள் வைத்திருந்தால் அதற்கு இந்த நகையை சிறிது நேரம் போட்டு விடுங்கள்.

-விளம்பரம்-

இனி நகை அடகுக்கே செல்லாது

இப்படி நீங்கள் அடகுவில் இருந்து திருப்பி கொண்டு வந்த நகையை மேலே சொன்ன வழிமுறைகளை பயன்படுத்தி சுத்தம் செய்து பின் உங்கள் வீட்டில் இருக்கும் சாமி படம் அல்லது விக்கிரகங்களுக்கு சிறிது நேரம் அந்த நகையை போட்டுவிட்டு சிறிது நேரம் கழித்து நீங்கள் அந்த நகையை எடுத்து அணிந்து கொள்வதாக இருந்தாலும் அணிந்து கொள்ளலாம் அல்லது நீங்கள் உங்கள் வீட்டு பீரோவில் பத்திரப்படுத்துவதாக இருந்தாலும் பத்திரப்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் எப்படி ஒருமுறை மட்டும் அடமானத்திலிருந்து மீட்டு வந்த தங்க நகைக்கு செய்துவிட்டால் போதும் இனி உங்கள் தங்க நகை என்றைக்குமே அடமானத்திற்கு செல்லாமல் மகாலட்சுமி தாயார் பார்த்துக் கொள்வார். நம்பிக்கையுடன் இதை செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.